இடைநிறுத்தப்பட்ட மனிதப் புதைகுழி அகழ்வுகள் - 40 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள்

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இடைநிறுத்தப்பட்ட மனிதப் புதைகுழி அகழ்வுகள் - 40 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள்

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி மேலும் விரிவடைந்து செவல்வதாக தெரிய வந்ததையடுத்து அகழ்வு பணிகளைத் தற்காலிகமாக நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்றுடன் புதன் (29) நிறுத்தப்பட்ட புதைகுழியின் அகழ்வுப் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் முதலாம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகும் என்று முல்லைத்தீவு நீதிமன்றில் நேற்று (29) நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர், சடலங்களை அகழ்ந்து எடுக்கும் பணிக்கு பொறுப்பான முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்தார்.

புதைகுழியானது கொக்கிளாய் - முல்லைத்தீவு நெடுஞ்சாலையில் 1.7 மீற்றர் நீளத்துக்கு நெடுஞ்சாலையை நோக்கி விரிவடைந்துள்ளமை ஸ்கான் பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது. இது தொடர்பிலேயே நேற்று கலந்துரையாடப்பட்டது.

இந்தப் புதைகுழி முற்றுமுழுதாக ஆராயப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே அனைவரும் உள்ளனர். எனவே, அடுத்த வருடம் மார்ச் முதலாம் திகதி தொடக்கம் ஒரு மாத காலத்துக்கு அகழ்வு பணிகள் இடம்பெறவுள்ளன.

இந்த அகழ்வுப் பணிகளை இலகுபடுத்தவும், ஒழுங்குபடுத்தவும் ஓர் அதிகாரி நியமிக்கப்படவுள்ளார். இதற்கான உத்தரவை நீதிபதி அரசாங்க அதிபருக்கு வழங்கியுள்ளார். பகுப்பாய்வு டிசெம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன என்றும் சட்ட மருத்துவ அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இதனிடையே, இரண்டாவது கட்டமாக 9ஆவது நாளாக நேற்று புதன் தொடர்ந்த அகழ்வு பணிகள் நேற்றுடன் நிறுத்தப்பட்டன. நேற்றுவரை புதன் புதைகுழியில் 40 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பான வழக்கு விசாரணை ஒன்று எதிர்வரும் டிசெம்பர் 14ஆம் திகதி முல்லைத்தீவு நீதிமன்றில் நடைபெறவுள்ளது. மேலும் அகழ்வுப் பணி மூன்று மீற்றர் அகலம், 14 மீற்றர் நீளம், 1.5 மீற்றர் ஆழத்துக்கு அகழப்பட வேண்டியிருக்கும் என்று கூறப்படுகின்றது.

இந்தப் புதைகுழி தொடர்பில் இதுவரை அறிக்கை எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை. இந்நிலையில், டிசெம்பர் 31 ஆம் திகதி முதல் அறிக்கையை பேராசிரியர் ராஜ் சோமதேவ சமர்ப்பிக்கவுள்ளார்.

இடைநிறுத்தப்பட்ட மனிதப் புதைகுழி அகழ்வுகள் - 40 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)