
posted 10th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
அவுஸ்திரேலியா அரசியல் தீர்வு விடையத்தில் மத்தியஸ்தம் வகிக்க வேண்டும்
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கும் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் பால் ஸ்டீபன்ஸ் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.
அச்சந்திப்பின் போது சமகால அரசியல் தொடர்பாகவும் குறிப்பாக மயிலத்தமடு மாதவனை பகுதிகளில் காணப்படும் பிரச்சனைகள் தொடர்பான முழு விபரங்களை அறியும் முகமாகவும் அதற்கான தீர்வுகளை பற்றியதாக இருந்தது. மற்றும் எமது கட்சியின் எதிர்கால மாநாடு தொடர்பாகவும். இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
அவுஸ்திரேலியாவும் எமது நாட்டைப் போல் (Federal) கூட்டாச்சி அரசியல் அமைப்பைக் கொண்ட நாடாகும். மாநிலங்கள் போல் இங்கு மாகாணமாக காணப்படுகின்றது. அங்கு மற்றைய நாடுகளை போல் அல்லாது இலங்கையை சேர்ந்த புலம்பெயர்ந்த சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள் என பலர் வாழ்ந்து வருகின்றார்கள் அவ் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் அவுஸ்திரேலியாவை நடுநிலைமை வகிக்கும் நாடு என்ற வகையில் ஏற்றுக்கொள்ளும் என்ற ரீதியில் அவுஸ்திரேலிய அரசானது எமக்கான அரசியல் தீர்வு விடையத்தில் மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் என்பதையும் இரா. சாணக்கியன் வலியுறுத்தினார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)