அம்பாறையில் அடை மழை, கடலரிப்பு

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

அம்பாறையில் அடை மழை, கடலரிப்பு

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் சீரற்ற காலநிலை ஏற்பட்டுள்ளதுடன் தொடர்ச்சியாக பெருமழையும் பெய்து வருகிறது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை அன்றாட வருமானம் பெற்று வந்த தொழில் துறைகளும் பாதிக்கப்பட்டு தொழிலாளர்கள் வருமானமின்றி முடங்கிக் கிடக்க வேண்டிய நிலமையும் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்தும் இந்த மாவட்டத்தில் பெருமழை பெய்தவண்ணமிருப்பதால் ஆறுகள், குளங்கள் நிரம்பத் தொடங்கியுள்ளதுடன், மேற்கொள்ளப்பட்ட பெரும்போக நெற்செய்கையின் விதைப்பு மேற்கொள்ளப்பட்ட நெற்காணிகளில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டு செய்கை பாதிக்கப்படும் நிலமை உருவாகலாமெனவும் விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

சில முக்கிய பிரதேசங்களில் பெரும்போக நெல் விதைப்பு மேற்கொள்ளப்பட்ட வயல் நிலங்கள் வெள்ளக்காடாகவே காட்சியளிக்கின்றன. இதேவேளை அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் தற்சமயம் கடல் பெருக்கமும், கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளதால் கடல் மீன்பிடி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் குறிப்பிட்ட சில பிரதேசங்களில் கடலரிப்பு ஏற்பட்டு பெரும்பாதிப்பு நிலையும் ஏற்பட்டடுள்ளது. குறிப்பாக முக்கிய பிரதேசமான நிந்தவூர்ப் பகுதியில் தற்சமயம் கடலரிப்பு உக்கிரமடைந்துள்ளதுடன், கடற்கரையை அண்டியிருந்த கட்டிடங்கள், மீனவர் வாடிகள் சேதமுற்று கடலால் காவு கொள்ளப்படும் நிலையும் ஏற்ட்டுள்ளதுடன், கடற்கரைப் பகுதியில் நீண்ட காலமாகப் பயன் தந்து வந்த தென்னை மரங்களும் கடலால் காவு கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் நிந்தவூரிலேற்பட்டுள்ள உக்கிர கடலரிப்பு காரணமாக கரைவலை, மற்றும் ஆழ்கடல் மீன்பிடியாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். கரைவலைகளை இழுப்பதற்கும், தோணிகளை நிறுத்தி வைப்பதற்கும் போதிய இட வசதியின்றி கடற்றொழிலாளர்கள் பெரும் அல்லலுற்றும் வரும் அவலம் நீடித்து வருகின்றது. நிந்தவூரில் இவ்வாறு உக்கிர கடலரிப்பு ஏற்பட்டு வருகின்ற போதிலும் இதற்கென நிரந்தர தீர்வு ஒன்றைக் காண்பதில் சம்பந்தப்பட்டவர்கள் அசமந்தப் போக்கிலேயே செயற்படுவதாகப் பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அம்பாறையில் அடை மழை, கடலரிப்பு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)