6 யாழ். பல்கலை மாணவர்கள் கைது

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

6 யாழ். பல்கலை மாணவர்கள் கைது

மட்டக்களப்பு சித்தாண்டியில் மேய்ச்சல் தரை பண்ணையாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 6 பல்கலைக்கழக மாணவர்களை, பொது போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் நேறறு ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பண்ணையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, நேற்று காலை 9 மணிக்கு சித்தாண்டி முருகன் ஆலயத்துக்கு முன்னால் ஒன்றுகூடியதை அடுத்து, அந்த மாணவர்கள் ஆர்ப்பாட்ட பேரணியாக போராட்டம் நடத்தும் பண்ணையாளர்களின் இடம் வரை சென்று, அங்கேயும் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்துள்ளனர்.

இதனையடுத்து, அந்த பகுதியில் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் முடிவுற்ற பின்னர், மாணவர்கள் பேருந்தில் கிழக்கு பல்கலைக்கழகத்தை நோக்கி பயணித்தபோது, பேருந்தை பின்தொடர்ந்து சென்ற சந்திவெளி பொலிஸார் பல்கலைக்கழகத்துக்கு அருகாமையில் வைத்து பேருந்தை நிறுத்தி, அதிலிருந்த 6 மாணவர்களை கைது செய்துள்ளனர்.

அந்த 6 மாணவர்களும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் சட்ட விரோதமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை, பொது வீதிப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

6 யாழ். பல்கலை மாணவர்கள் கைது

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)