
posted 26th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
50 எழுத்து ஆளுமைகள்
பாவேந்தர் பாலமுனை பாறூக் எழுதிய ‘50 எழுத்து ஆளுமைகள்' நூல் வெளியீட்டு விழா அட்டாளைச்சேனை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் சாபிர், தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதி பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் கலந்து கொண்டார்.
கௌரவ அதிதியாக கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ச.நவநீதன், உட்பட பிரதேச செயலாளர்கள், மாவட்ட,பிரதேச கலாசார உத்தியோகத்தர்கள், கல்வியியலாளர்கள், எழுத்து ஆளுமைகள், இலக்கிய வாதிகள், ஊடகவியலாளர்கள், டாக்டர்கள், சட்டத்தரணிகள், சமூகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது நூல் ஆசிரியருக்கு வாழ்த்துப்பா, நினைவுச் சின்னங்கள் போன்றனவற்றை திருக்கோவில் திருவதிகை கலைக் கூடல், பாலமுனை தோழமைகள் அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகளால் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)