
posted 22nd November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
50 எழுத்து ஆளுமைகள்
பிரபல கவிஞரும், எழுத்தாளருமான பாலமுனை பாறூக் எழுதிய “50 எழுத்து ஆளுமைகள்” நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 25 ஆம் திகதி (25.11.2023) சனிக்கிழமை நடைபெறவிருக்கின்றது.
அட்டாளைச்சேனை, பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் சாபிர் தலைமையில், அட்டாளைச்சேனை பிரதேச செயக கேட்போர் கூடத்தில் இந்த வெளியீட்டு விழா நடைபெறும்.
பாலமுனை தோழமைகள் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும் விழாவில், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர் றமீஸ் அப்துல்லா பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார்.
அத்துடன், கௌரவ அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழக ஓய்வு நிலைப் பேராசிரியர் செ. யோகராசா, தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் எஸ். குணபாலன், உதவிக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி. ஹனீபா இஸ்மாயில், தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளரும், எழுத்தாளருமான எம். அப்துல் றஸாக் ஆகியோரும்,
விஷேட அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனிபா, கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி. அதிசயராஜ், அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.எம்.எம். றின்ஷான், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் ஏ.எல். தௌபீக், கலாச்சார உத்தியோகத்தர் எம்.எஸ். ஜௌபர் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
நூலின் முதற்பிரதியை பிரபல வர்த்தகப் பிரமுகர் கே.எல்.எம். ஜிப்ரி (மின்ஹா ஜுவலர்ஸ் - கல்முனை) பெற்றுக்கொள்வதுடன், இலக்கிய பிரமுகர்கள், ஆர்வலர்கள் பலரும் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)