
posted 9th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
வீடுகளை உடைத்து தங்க நகைகள் திருடிய பெண் உட்பட மூவர் கைது
இருவேறு வீடுகளை உடைத்து தங்க நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் ஒருவரும் உடந்தையாக இருந்த பெண் உட்பட இருவரும் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து ஒரு தொகுதி நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மற்றொரு தொகுதி நகை மன்னார் மற்றும் திருகோணமலை பகுதிகளில் வங்கியில் அடகு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
கடந்த மார்ச் மாதம் 05ஆம் திகதி கோப்பாய் பொலிஸ் பிரிவில் அதிகாலைவேளை ஆட்கள் இல்லாத நேரம் வீடு உடைத்து ஐந்தே கால் பவுண் நகைகளை திருடியமை, மற்றொரு வீட்டில் கடந்த ஏப்ரல் முதலாம் திகதி ஆட்கள் அற்ற நிலையில் 13 பவுண் நகைகளை திருடியமை தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அவை தொடர்பில் உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
முதன்மை சந்தேக நபரான திருநெல்வேலியைச் சேர்ந்த 22 வயதுடையவரையும் நகையை வாங்கி உருக்கிய ஒருவரையும் உடந்தையாக இருந்த பெண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)