வட்டுக்கோட்டை  அராலி இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

வட்டுக்கோட்டை அராலி இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா

அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும், நிறுவுனர் நினைவு நாளும் நேற்று (10) வெள்ளிக்கிழமை கல்லூரியின் பொது மண்டபத்தில் நடைபெற்றது.

விருந்தினர்கள் மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க அரங்கிற்கு அழைத்து வரப்பட்டனர்.

அதனைக் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் வைபவம் இடம்பெற்றது. தொடர்ந்து வரவேற்புரை ஆற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து விருந்தினர்களின் உரை இடம்பெற்றது. பின்னர் மாணவர்களது கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இறுதியில் பரிசில்கள் வழங்கும் வைபவம் இடம்பெற்றது.

கல்லூரியின் அதிபர் திரு.கு. பாலமுருகன் அவர்களது தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், யாழ்ப்பாணம் இந்திய துணை தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் அவர்கள் பிரதம விருந்தினராகவும், வலிகாமம் கல்வி வலய உதவிப் பணிப்பாளர் திரு.சி. மதியழகன் சிறப்பு விருந்தினராகவும், இளைப்பாறிய அதிபர் திரு.ந. சபாரத்தினசிங்கி அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்ததுடன், இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி சாரா ஊழியர்கள், அயற்பாடசாலை அதிபர்கள், பழைய மாணவர்கள், அயற்பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

வட்டுக்கோட்டை  அராலி இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)