
posted 4th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
வடமாகாணத்தில் 401 புதிய அதிபர்கள் நியமனம்
அதிபர் தரத்திற்கு ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த 401 புதிய அதிபர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று (04 ஒக்டோபர்) யாழ்ப்பாணம் கோப்பாயில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் வழங்கி வைக்கப்பட்டன.
வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
வடமாகாணத்தில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களுக்கு இவர்கள் அதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ளன.
வழங்கப்பட்ட புதிய நியமனங்களுடன் வடமாகாண பாடசாலைகளின் நிலவும் அதிபர் வெற்றிடங்கள் நிரப்பப்படும் என வடமாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)