
posted 7th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
வடமாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட சீன தூதுவர்
சீன தூதர் பருத்தித்துறைக்கு விஜயம்!
இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான குழுவினர் பருத்தித்துறைக்கு நேற்று (06) திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்டனர்.
சீன அரசினால் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி நடவடிக்கைகளை பார்வையிடும் வகையில் வடக்கு மாகாணத்திற்கு மேற்கொண்டுள்ள விஜயத்தின் ஒரு பகுதியாக நேற்று முற்பகல் 11.30 மணிக்கு பருத்தித்துறை - சற்கோட்டை முனைக்கு குழுவினரோடு சென்றுள்ளார்.

நாவற்குழி விகாரையில் சீன தூதுவர்
சீனாவின் பௌத்த மக்களின் உதவியுடன் இலங்கையின் ஏழை மக்களுக்கு உலருணவு வழங்கும் நிகழ்வு நேற்று (06) திங்கட்கிழமை நாவற்குழி ஸ்ரீ சமித்தி சுமன விகாரையில் இடம்பெற்றது.
நாவற்குழி ஸ்ரீ சமித்தி சுமன விகாரையின் தலைவர் ரத்னஸ்ரீ தேரர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வில் சீனத் தூதுவர் ஷீ ஷென் ஹொங் கலந்து கொண்டு நாவற்குழியில் உள்ள தேவைப்பாடுடைய சிங்கள மற்றும் தமிழ் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கினார்.
மேற்படி உதவித்திட்டம் சீனாவின் பெளத்த சங்கம் ,இலங்கை மற்றும் சீன பௌத்த நட்புறவுச் சங்கம் ஊடாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நீர் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தை காரைநகரில் பார்வையிட்ட சீன தூதர்
(எஸ் தில்லைநாதன்)
காரைநகர் சாம்பலோடை பிரதேசத்தில் சீன அரசின் உதவியுடன் அமையவுள்ள நீர் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தை இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷி ஷென் ஹொங் நேற்று (06) திங்கள்பார்வையிட்டார்.
இச் சந்திப்பில் உள்ளூராட்சி ஆணையாளர், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர், பிரதேச சபை செயலாளர் , உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இச் சந்திப்பில் சீன அரசாங்கத்தின் உதவித் திட்டம் தொடர்பில் தூதுவரினால் மக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன் பொதுமக்களின் தேவைகள் தொடர்பிலும் அவர் கேட்டறிந்துகொண்டார்.
இந் நிகழ்வில் சீனத் தூதுவருக்கு பொதுமக்கள் மாலை மற்றும் பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர்.
நயினாதீவுக்கு விஜயம் செய்த சீனத் தூதுவர்!
(எஸ் தில்லைநாதன்)
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் தலைமையிலான குழுவினர் இரண்டாம் நாளாக நயினாதீவுக்கு விஜயம் செய்து பார்வையிட்டதுடன் சீன அரசின் உலர் உணவுப் பொதிகளையும் மக்களுக்கு வழங்கி வைத்தனர்.
இலங்கை மற்றும் சீனா பௌத்த நட்புறவு சங்கமும், சீனாவின் புத்த சங்கம் இணைந்து சீனாவில் உள்ள பௌத்த மக்களால் இலங்கையிலுள்ள வறிய மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்கிவைக்கப்பட்டது.
நயினாதீவு நாக விகாரையில் நடந்த நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 500 குடும்பங்களுக்கு உலர் உணவுபொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)