
posted 10th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் அறிக்கை வாபஸ்
சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கம் அவர்களின் உரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே கடந்த 31-10-2023 அன்று நிறுத்தப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் நேற்றைய (09) தினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில், ஒருவர் வெளியிட்ட தனிப்பட அரசியற் கருத்தின் அடிப்படையில் அவரைப் பல்கலைக்கழகத்திலே பேச அனுமதிக்கக் கூடாது எனப் பல்கலைக்கழக மாணவர்கள் நிருவாகத்துக்கு நெருக்குவாரம் கொடுத்தமை மிகவும் தவறான ஒரு செயல் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அந்த அறிக்கையில் பதிவிட்டது.
இந்நிலையில் இந்த அறிக்கைக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் பல்கலைக்கழக வாயில்களை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் அந்த அறிக்கையை மீளப்பெற்று வாங்கியதையடுத்து மாணவர்களின் போராட்டம் நிறைவுக்கு வந்தது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)