முன்மொழிவுகள் சமர்ப்பிப்பு

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

முன்மொழிவுகள் சமர்ப்பிப்பு

கல்முனை மாநகர சபையின் 2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்திற்கு மருதமுனை பிரதேசத்தை மையப்படுத்தி, "அபிவிருத்திக்கான மனாரியன்ஸ் நண்பர்கள் அமைப்பு" பல்வேறு முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளது.

அமைப்பின் தலைவர் எம்.ஐ.எம். வலீத் தலைமையில் செயலாளர் ஐ.எல். றுஸ்துல் பாரி, பொருளாளர் ஏ.எஸ்.எம். முஜீப் ஆகியோர், மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மியை சந்தித்து, இதனைக் கையளித்துள்ளனர்.

இந்நிகழ்வில் மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், பொறியியலாளர் ஏ.ஜே.எச். ஜௌஸி ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். இதன்போது குறித்த முன்மொழிவுகளை மாநகர சபையின் பட்ஜெட்டில் உள்வாங்கி, நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டது.

  • மருதமுனை மக்கள் மண்டபத்தை புரைமைப்பு செய்து மக்கள் பாவனைக்கு வழங்க வேண்டும்.
  • மருதமுனை கடற்கரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவை பாவனைக்கு உகந்ததாக புனரமைப்புச் செய்தல்.
  • அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் இருந்து வருகின்ற மக்களின் பிரசித்தி பெற்ற பொழுதுபோக்கிடமாக காணப்படுகின்ற மருதுமுனை கடற்கரைப் பிரதேசத்தில் பொருத்தமான இடங்களில் பொது மலசல கூட வசதி, வகன தரிப்பிட வசதி என்பவனவற்றை ஏற்படுத்தல்.
  • மருதமுனை பொது நூலகத்திற்கு தேவையான தளபாடங்கள் உள்ளிட்ட உள்ளக வசதிகளை மேம்படுத்தல்.
  • மருதமுனை வடக்கு பிரதேசமான பெரியநீலாவணை உள்ளடங்கலான நீர்வடிகாலமைப்பு வசதிகளை ஏற்படுத்தல்.
  • மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் கடின பந்து கிரிக்கட் விளையாடக் கூடியதாக பாதுகாப்பு வலை வசதி ஏற்படுத்திக் கொடுத்தல்.
  • மருதமுனை அல்மனார் அருகாமையில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் வெளிச்ச வசதிகளை ஏற்படுத்தல்.
  • இம்மைதானத்தை அண்டியதாக உள்ள பாதையினை மக்கள் பாவனைக்கு உகந்ததாக புனரமைத்தல்.
  • மருதமுனை மேற்குப் பிரதேசத்தில் புதிதாக குடியேறியுள்ள மக்களின் நலன் கருதி நூலகம் மற்றும் விளையாட்டு மைதானம் என்பவற்றை அமைத்தல்.
  • மருதமுனை மேற்குப் பிரதேசத்தில் புதிதாக அமையப்பெற்றுள்ள பிரான்ஸ் சிற்றி வீட்டுத்திட்ட முகப்பு பகுதியில் சிறுவர் பூங்கா அமைத்தல்.

உள்ளிட்ட விடயங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

முன்மொழிவுகள் சமர்ப்பிப்பு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)