மட்டக்களப்பில் ஒரு புதிய அமெரிக்க புத்தாக்க மையம்

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

மட்டக்களப்பில் ஒரு புதிய அமெரிக்க புத்தாக்க மையம்

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் ஒரு புதிய அமெரிக்க புத்தாக்க மையத்தினை (iHub) நேற்று (16) மட்டக்களப்பில் திறந்து வைத்ததுடன் சிறப்பு விருந்தினராக இணைந்துகொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களையும் வரவேற்றார். அமெரிக்க தூதரகம் மற்றும் ட்ரீம் ஸ்பேஸ் அகடமி ஆகியவற்றிற்கிடையிலான ஒரு கூட்டு முயற்சியாக மட்டக்களப்பில் திறந்து வைக்கப்படும் இந்த iHub கிழக்கு மாகாண இளைஞர்களை வலுப்படுத்துதல், அறிவுப் பரிமாற்றத்தைப் பேணி வளர்த்தல் மற்றும் அமெரிக்காவிற்கும், இலங்கைக்கும் இடையில் காணப்படும் மக்களுக்கிடையிலான உறவுகளை மேம்படுத்துதல் ஆகிய விடயங்களை நோக்கமாகக் கொண்டுள்ளது. மட்டக்களப்பில் உள்ள அமெரிக்க iHub இனைத் தவிர, கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் மாத்தறை ஆகிய இடங்களில் ஊடாடும் American Spacesகளை அமெரிக்கத் தூதரகம் கொண்டுள்ளது.

“இலங்கையிலுள்ள எமது ஐந்தாவது American Space ஆகிய மட்டக்களப்பு iHub, கிழக்கு மாகாணத்தை அமெரிக்காவுடன் இணைக்கும் முக்கிய இணைப்பாக இருப்பதுடன் நாடு முழுவதுமுள்ள இளைஞர்களிடையே தொடர்புகளையும் வளர்க்கும்” என அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் தெரிவித்தார். “இந்த ஆண்டு எமது இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளின் 75 ஆண்டு நிறைவை நாம் கொண்டாடுகையில், இப்பிராந்தியத்திலுள்ள இளைஞர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு, புத்தாக்கம், தலைமைத்துவம், கல்வி மற்றும் ஒத்துழைப்பை பேணிவளர்த்தல் போன்ற விடயங்களில் ஒரு பெரும் நம்பிக்கையை இந்நிலையம் வழங்குகிறது. அமெரிக்காவிற்கும், இலங்கைக்கும் இடையிலான நீடித்த மற்றும் உறுதியான பங்காண்மையை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், அனைத்து மக்களும் சௌகரியமாகவும், உத்வேகமாகவும் உணரும் ஒரு இடமாக இது விளங்கும் என நான் நம்புகிறேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.

புத்தகங்கள், டிஜிட்டல் வளங்கள், மல்டிமீடியா உள்ளடக்கங்கள் மற்றும் இணைய தரவுத்தளங்கள் உட்பட பலதரப்பட்ட இலவச வளங்களுக்கான அணுகலை வழங்குகின்ற புலமைசார் ஈடுபாட்டின் ஒரு மையமாக விளங்கும் வகையில் மட்டக்களப்பு iHub வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் தங்கள் எல்லைகளை விரிவுபடுத்துவதற்கும், கலந்துரையாடல்களில் ஈடுபடுவதற்கும், கல்வி மற்றும் சமூக அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்யும் செயற்திட்டங்களில் ஒத்துழைப்பதற்கும் ஒன்றுகூடக்கூடிய ஒரு இடமாக இது செயற்படுகிறது. ஆங்கில மொழியினை கற்றல், தொழில்முயற்சியாண்மை, STEM (விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) மற்றும் அமெரிக்க இலக்கியம் மற்றும் வரலாறு போன்ற விடயப்பரப்புகளில் கவனம் செலுத்தும் பல்வேறு இலவச கற்கைநெறிகள், செயலமர்வுகள் மற்றும் பல்வேறு நிகழ்வுகளை iHub நடத்துகிறது. இந்த நடவடிக்கைகள் பங்கேற்பாளர்களின் திறன்களை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், சிந்தனை மற்றும் கருத்துக்களின் பன்முகத்தன்மையினை ஆழமாக பாராட்டும் ஒரு தன்மையினையும் வளர்க்கின்றன.

இலக்கம் 7A சரவண வீதி, கல்லடி, மட்டக்களப்பு எனும் முகவரியில் அமைந்துள்ள மட்டக்களப்பு iHub திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையும் சனிக்கிழமைகளில் காலை 9:00 மணி முதல் மதியம் 12 மணி வரையும் பொதுமக்களின் பாவனைக்காகத் திறந்திருக்கும். iHubஇல் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் அனைத்தும் இலவசமாக நடத்தப்படும்.

மட்டக்களப்பில் ஒரு புதிய அமெரிக்க புத்தாக்க மையம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)