
posted 16th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
போசாக்கு குறைவான பிள்ளைகளுக்கான போசாக்கு உலர் உணவுப் பொதிகள்
போசாக்கு குறைவான பிள்ளைகளுக்கான போசாக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு நேற்று (15) புதன்பகல் 2 மணியளவில் கிளிநொச்சி பாரதிபுரம் பொது நோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.
தெரிவு செய்யப்பட்ட போசாக்கு குறைவான 10 பிள்ளைகளுக்கான போசாக்கு உலர் உணவுப் பொதிகள் இவ்வாறு வழங்கிவைக்கப்பட்டன.
கிளிநொச்சி மாவட்ட பெண்கள் மீழ் எழுச்சி அமைப்பின் தலைவி செல்வராஜ் திருலோக சுந்தரி தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் குறித்த கிராம பிரிவுக்கான குடும்ப நல உத்தியோகத்தரும் கலந்து கொண்டார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)