புலமைப் பரிசில்கள்

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

புலமைப் பரிசில்கள்

கல்முனை டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் தவிசாளர் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் றிசான் ஜெமீல் அவர்களின் தூர நோக்குடனான சிந்தனையின் அடிப்படையில் கிழக்கில் முதன் முறையாக DP Education தகவல் தொழில்நுட்ப வளாகத்தின் டிஜிட்டல் கட்டமைப்புடனான தகவல் தொழில்நுட்ப பாடநெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் முதல் தர தொழில் அதிபர் பிரபல சமூக சேவையாளர் தம்மிக்க பிரேராவிடம் டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் தவிசாளர் டாக்டர் றிசான் ஜெமீல் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இப்பிராந்தியத்தில் முதல் தடவையாக முன்னெடுக்கப்படும் இவ்வேலை திட்டத்தின் மூலம் பாடசாலை மாணவர்களுடன், பாடசாலை கல்வியை முடித்தவர்களும் பெரும் நன்மையை அடைய உள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் கடந்த 39 வருடங்களாக சுகாதார துறையில் மட்டுமின்றி இப்பிராந்தியத்தின் கல்வி, கலாசார, சமூக நலன் மற்றும் வாழ்வாதார நடவடிக்கைகளில் பெரும் பங்காற்றி வரும் கல்முனை டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலை, கல்முனை அல் ஹாமியா அரபுக் கல்லூரியுடன் இணைந்து இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு ஏற்ற வகையில் இப்பிராந்திய மாணவர்களையும் வழிப்படுத்தும் நோக்குடன் முன்னெடுத்துள்ள இந்த டிபி கல்வி தகவல் தொழில்நுட்ப வளாகத்தின் இலவச கல்விச் சேவை கிழக்கு மாகாணத்திற்கு விஸ்தரிக்கப்படுகின்றமை பெரும் வரப்பிரசாதமாகும்.

தரமான கல்வி மற்றும் சுகாதார வசதிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட தம்மிக்க மற்றும் பிரிசிலா பெரேரா அறக்கட்டளை நிலையத்தின் ஒரு திட்டமான டிபி எடியுகேஷன் ஐ ரி கம்பர்ஸ் கல்முனையில் ஆரம்பிக்கும் இச் சேவையானது முற்றிலும் இலவசமாக வழங்கப்பட உள்ளதுடன் ஒரு மாணவருக்கு சுமார் 25 லட்சம் ரூபாய் பெருமதியான கணனி குறியீட்டு முறை கற்கை நெறி மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற இன்றைய காலத்தின் கணினி தொழில்நுட்ப தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கற்கை நெறிமூலம் இப்பிரதேசத்தில் உள்ள இளைஞர் யுவதிகள் பெரும் நன்மை அடைய உள்ளனர்.

இத்திட்டத்தின் கீழ் இப்பிரதேசத்தில் முதல் கட்டமாக 750 மாணவ மாணவியர்களுக்கு இதற்கான புலமைப் பரிசில்கள் வழங்கப்பட்டு அம் மாணவர்களின் தொழில்நுட்ப கல்வித் தகமையை மேம்படுத்த டிபி கல்வி தகவல் தொழில்நுட்ப வளாகம் முன்வந்துள்ளமை குறித்து இப்பிரதேச கல்விமான்கள் புத்திஜீவிகள் பலரும் வரவேற்றுள்ளனர்.

மேலும் இப்பாடநெறியில் குறிப்பிட்ட அலகுகளில் தேர்ச்சி பெற்ற பின்னர் (சுமார் 120 அலகுகள் தேர்ச்சி அடைந்த பின்னர்) மாணவர்கள் மொறட்டுவ, ருஹுணு, களணி போன்ற பல்கலைக்கழகங்களில் கணினி சிறப்பு பிரிவுகளில் தமது கற்கை நெறியை தொடர முடியும். இதன் மூலம் இப்பிரதேச இளைஞர் யுவதிகள் மத்தியில் இருந்து வந்த பாரிய கணனி குறியீட்டு முறை கற்கை கல்வி தாகம் தீர்த்து வைக்கப்பட உள்ளதுடன் உள்நாட்டு வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளை இலகுவாக இப்பிராந்தியத்தின் இளைஞர்கள் பெற்றுக்கொள்ள இதுவோர் பெரும் வரப்பிரசாதமாக அமைய உள்ளது.

இக்கற்கை நெறியானது அனைவரும் இலகுவாக கற்கும் வகையில் சுய கற்றல் முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் தரம் 6 சித்தியடைந்த 11 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இலகுவாக விளங்கிக் கொள்ளும் வகையில் காணொளி வடிவில் தயார் படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த பிரதேசத்தில் கல்முனை டாக்டர் ஜமீல் ஞாபகம் வைத்தியசாலை மற்றும் அல் ஹாமியா அரபுக் கல்லூரி ஆகியனவற்றின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் இத்திட்டம் கல்முனை வாடி வீட்டு வீதியில் அமைந்துள்ள அல் ஹாமியா அரபு கலாசாலையின் வளாகத்தில் பிரத்தியோகமாக அமையப் பெற்றுள்ள கணினி ஆய்வு கூடத்தில் இடம்பெற உள்ளது.

இது தொடர்பான அறிமுக நிகழ்வு சாய்ந்தமருது பிரதான வீதியில் உள்ள டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கேட்போர் கூடத்தில் பேராசிரியர் ரஷ்மி ஆதம்பாவா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் முகாமைத்துவ பணிப்பாளர் டாக்டர் சனா, கல்முனை அல் ஹாமியா அரபுக் கல்லூரியின் ஆளுநர் சபை உறுப்பினர்களான முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஏ எம் ஆரிப் சம்சுதீன், ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி மௌலவி இஷட் எம் நதீர் உட்பட பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் அரபு மதரஸாக்களின் அதிபர்கள் ஊடகவியலாளர்கள் என பெருந்தொகையானோர் கலந்து கொண்டனர்.

இதன் மூலம் நவீன சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் இப்பிராந்தியத்தில் உள்ள தமிழ், முஸ்லிம், சிங்கள மாணவர்கள் மட்டுமின்றி பாடசாலை கல்வியை முடித்தவர்களும் பெரும் பயனடைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.

புலமைப் பரிசில்கள்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)