
posted 2nd November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
பிரிவுபசார விழாவும் சேவை நலன் பாராட்டு நிகழ்வும்
பருத்தித்துறை வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளராகக் கடமையாற்றி, இலங்கை நிர்வாக சேவையின் அதிவிசேட தரத்துக்குப் பதவி உயர்த்தப்பட்டு, வடக்கு மாகாண சபையின் அமைச்சுக்கு இடமாற்றலாகிச் செல்லும் ஆழ்வாப்பிள்ளை சிறியின் பிரிவுபசார விழாவும், சேவை நலன் பாராட்டு நிகழ்வும் நேற்று முன்தினம் (31) செவ்வாய் நடைபெற்றது.
பருத்தித்துறை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஊழியர் நலன்புரிச் சங்கத் தலைவரும் கிராம உத்தியோகத்தருமான அரியகுமார் ரதீஸ்கரன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
மருதடி ஞானவைரவர் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து பிரதேச செயலாளர், தவில் நாதஸ்வர வாத்தியத்துடன் விழா மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
இந்த நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் பசுபதி தயானந்தன், கணக்காளர் ம. சிவகுமாரன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் செ. சுபச்செல்வன் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் மா. முரளி, நிர்வாக கிராம அலுவலர் சோ. சிவலிங்கம், தலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளர் அ. ரவிச்சந்திரன், சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
ஏனைய பிரதேச செயலகங்களான யாழ்ப்பாணம், நல்லூர், கோப்பாய், தெல்லிப்பளை, மருதங்கேணி, கரவெட்டி பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தமது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் ஆழ்வாப்பிள்ளை சிறிக்குத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)