
posted 4th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையிலும் அரச மருத்துவர்களின் பணி பகிஷகரிப்பு
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையிலும் நேற்றைய தினம் அரச மருத்துவர்களின் பணி பகிஷகரிப்பு இடம்பெற்றுவருகிறது.
வட மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் வெள்ளிக்கிழமை (03) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசுக்கு வழங்கப்பட்ட முன்மொழிவுகள் தொடர்பில் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையிலேயே ஒரு நாள் வேலை நிறுத்தமாக நேற்றைய தினம் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையிலும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
எனினும் அவசர, மகப்பேறு, சிறுவர், சிறுநீரக சிகிச்சைகள் என்பன இடம் பெற்றுவருகின்றது.
இதே வேளை நேற்று காலை 8 மணியிலிருந்து நாளை சனிக்கிழமை காலை 8:00 மணி வரை குறித்த போராட்டத்தை முன்னெடுக்கப்பட உள்ளதாக வடமாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அரசாங்கமானது தமது முன்மொழிவுகளின் ஊடாக தற்சமயம் மேற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கும் முன்வர வேண்டும். அவ்வாறு தீர்வை வழங்கி வைத்தியர்களை நாட்டில் தக்கவைத்து, இலவச சுகாதார சேவைை பேணுவதற்கு தவறும் பட்சத்தில் போராட்டத்தை தீவிர படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)