
posted 14th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
ஞானவைரவர் ஆலயத்தை அழித்த அரசமரம்
ஆலயம் ஒன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததால் குறித்த ஆலயம் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என். சூரியராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
வலிகாமம் மேற்கு, சங்கானை - வட்டு மேற்கில் (ஜே/167) பாரிய அரசமரம் ஒன்று நேற்றிரவு திங்கள் (13) தொடர்ந்து பெய்த மழையால் குடைசாய்ந்து விழுந்துள்ளது.
இப்பிரிவில் உள்ள ஞானவைரவர் ஆலயத்துக்கு அருகில் இருந்த மரமே இவ்வாறு விழுந்துள்ளது. இதனால் ஆலயத்துக்கு சேதம் ஏற்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)