சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள்

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள்

சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு மாபெரும் நடைபவனி ஒன்று வட்டுக்கோட்டையில் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நடைபவனியானது வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி, வைத்திய கலாநிதி திரு. செந்தூரன் அவர்களது தலைமையில் நடைபெற்றது.

இந்த நடைபவனியானது வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் இருந்து சங்கரத்தை சந்திவரை சென்று அங்கு நிறைவுற்றது.

வைத்திய கலாநிதி திரு. செந்தூரன் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்த நடைபவனியில், வடக்கு மாகாண பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி, சங்கானை உதவிப் பிரதேச செயலர், அராலி மத்தி ஆயுர்வேத வைத்தியசாலை வைத்தியர்கள், வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலை பணியாளர்கள், நலன்புரி சங்கத்தினர், அராலி மத்தி ஆயுர்வேத வைத்தியசாலை பணியாளர்கள், லயன்ஸ் கழகத்தினர், சங்கானை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அராலித்துறை இராணுவ முகாமின் இராணுவ வீரர்கள், தெல்லிப்பழை வைத்தியசாலை தாதியர் மேற்பார்வை உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

அதன்பின்னர் சங்கானை பிரதேச செயலகத்தின் நீரிழிவு விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இதன்போது இலவச நீரிழிவு பரிசோதனை வைத்திய முகாமும் முன்னெடுக்கப்பட்டது.

இதில் கலந்துகொண்ட யாழ்ப்பாண மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் அவர்கள் நீரிழிவு நோயை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தொடர்பான விளக்கத்தினை வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து யோகாசனம் மூலம் நீரிழிவை கட்டுப்படுத்தும் நோக்கில், அராலி மத்தி ஆயுர்வேத வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் பணியாளர்களால் யோகாசன விழிப்புணர்வு செயற்றிட்டம் செய்து காண்பிக்கப்பட்டது.

சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)