
posted 19th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
சட்டவிரோத மீன்பிடியில் 22 இந்தியர்கள் கைது
யாழ்ப்பாணம் - பருத்தித்துறையை அண்மித்த கடற்பகுதியில் நேற்று சனிக்கிழமை (18) சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது, குறித்த மீனவர்களுக்கு சொந்தமான 2 படகுகளும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டுள்ள 22 இந்திய மீனவர்களும் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அழைத்துவரப்பட்டனர்.
இந்த நிலையில், அவர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்றொழில் பரிசோதகர் திணைக்களத்திடம் ஒப்படைக்கவுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)