
posted 23rd November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
கொடியேற்ற விழா ஏற்பாடுகள் சம்மந்தமான உயர்மட்ட கூட்டம்
எதிர்வரும் டிசம்பர் மாதம் 14ம் திகதி முதல் நடைபெறவிருக்கும் வரலாற்று புகழ்மிக்க கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா ஷரீப்பின் 202வது வருடாந்த கொடியேற்ற விழாவின் ஏற்பாடுகள் பற்றிய உயர்மட்டக் கூட்டம் கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாக்கத் அலியின் பணிப்புரைக்கு அமைய உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம். ஜெளபர் தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 14ம் திகதி முதல் டிசம்பர் 26ம் திகதி வரை நடைபெறும் இவ் விழாவுக்கான அரச வர்த்தமானி பிரகடனத்தை தொடந்து முக்கிய விடயங்கள், ஒருங்கிணைப்புகள் சம்மந்தமாக கலந்தாலோசிப்பதற்காக இக் கூட்டம் கூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந் நிகழ்வில் கல்முனை முஹைத்தீன் ஜும்மா பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ. அஸீஸ் , செயலாலர் எம். ரிஸாட், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் சார்பாக பிராந்திய தொற்று நோய் தடுப்பியலாளர் டாக்டர் எம்.ஏ.சி.எம். பசால், கல்முனை தொற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம். அஸ்மி, மாநகர சபை பிரதம முகாமைத்துவ சேவை அதிகாரி (சுகாதர பிரிவு) எம். இஸ்ஸாக், கரையோரம் பேணல் திணைக்கள உத்தியோகத்தர் எம்.எச். மப்ரூக், முஸ்லிம் கலாச்சார உத்தியோகத்தர் மெளலவி எம். அஸீம், கடற்படை உயர் அதிகாரி, நீர்வழங்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் மின்சார சபையின் உயர் அதிகாரிகள் பாடசாலை அதிபர், பொது சுகாதார பரிசோதகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)