
posted 30th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
கிழக்கு பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஆய்வரங்கு
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலைப்பீட மொழித்துறையினருடன் இணைந்து இலக்கிய ஆய்வரங்கு ஒன்றை முழு நாள் நிகழ்வாக நடத்தவுள்ளது.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் 2023 தமிழ் இலக்கிய விழாவின் ஓர் அங்கமாக இந்த ஆய்வரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
“2000ஆம் ஆண்டின் பின்னரான கிழக்கிலங்கையின் இலக்கிய செல் நெறி” எனும் தலைப்பிலான இந்த இலக்கிய ஆய்வரங்கு எதிர்வரும் டிசம்பர் 02 ஆம் திகதி சனிக்கிழமை, தென்கிழக்கு பல்கலைக்கிழக ஒலுவில் வளாக மொழித்துறை அரங்கத்தில் நடைபெறும்.
வாழ்நாள் பேராசிரியர் அ. சண்முகதாஸ் தலைமையில் அன்றைய தினம் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணிவரையும் இந்த இலக்கிய ஆய்வரங்கை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ச. நவநீதன் தெரிவித்தார்.
இந்த ஆய்வரங்கில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் இலக்கிய ஆய்வுகளின் தலைப்புக்களும் ஆய்வாளர்களதும் விபரம் பின்வருமாறு;
- திறனாய்வு துறையின் செல்நெறி:
ஜனாப். ஆ. அப்துல் றஸாக்
விரிவுரையாளர், மொழித்துறை, தென்கிழக்குப் பல்கலைக்கழகம்.
- கவிதைத்துறையின் செல்நெறி:
கலாநிதி. த. மேகராசா
விரிவுரையாளர் தமிழ்த்துறை, கிழக்கு பல்கலைக்கழகம்.
- நாவல்துறையின் செல்நெறி:
கலாநிதி. சத்தார் பிர்தௌவுஸ்,
வருகை விரிவுரையாளர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம்.
- மொழி பெயர்ப்புத்துறையின் செல்நெறி:
பேராசிரியர். ஏ.எப்.எம். அஸ்ரப்
சிரேஸ்ட விரிவுரையாளர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம்.
- சிறுகதைத்துறையின் செல்நெறி:
கலாநிதி. கனீபா இஸ்மாயில்,
உதவிக் கல்விப்பணிப்பாளர், அக்கரைப்பற்று வலயக்கல்வித்திணைக்களம்.
- இளந்தலைமுறையினரின் ஆக்க இலக்கியங்களின் செல்நெறி:
கலாநிதி. ரி. பிரதீபன்
நூலகர், ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்.
- பெண் எழுத்துக்களின் செல்நெறி:
கலாநிதி. எம். நதிரா
விரிவுரையாளர், மொழித்துறை, கிழக்கு பல்கலைக்கழகம்.
- இலக்கியத்தில் நவீன தொழில்நுட்பத்தின் செல்வாக்கு:
திரு. மு. மயூரன்
கணனி மென்பொருள் பொறியியலாளர், திருகோணமலை.
- ஆய்வின் நோக்கு அடைவு பற்றிய பகிர்வு:
கலாநிதி. மனோன்மணி சண்முகதாஸ்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)