
posted 8th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
ஏறாவூர் நகர சபைக்கு விஜயம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக மீண்டும் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்கள் பதவியேற்றதன் பிற்பாடு ஏறாவூர் நகர சபையின் செயலாளர் H.M.M. ஹமீம்இன் அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்கள் .
இதன்போது நகரசபை செயலாளர் எம்.எச்.எம். ஹமீம் தலைமையில் உத்தியோகத்தர்களினால் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மெளலானா அவர்களுக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நகரசபை ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் எதிர்கால அபிவிருத்தி விடயங்கள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் இதன்போது அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
இந்நிகழ்வில் முன்னாள் நகர சபையின் தவிசாளர். எம்.எஸ். நழீம் உட்பட பிரமுகர்கள் நகர சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)