
posted 8th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
உரும்பிராய் கிழக்கு முதியவர்கள் கௌரவிப்பு
கோப்பாய் தேசோதய சங்கத்தின் ஏற்பாட்டில் முதியோர் கோரவிப்பு நேற்று உரும்பிராயில் இடம் பெற்றது.
கோப்பாய் தேசோதய தலைவர் இ.மயில்வாகனம் தலமையில் உரும்பிராய் கிழக்கு காந்திஜி சனசமூக நிலையத்தில் இடம் பெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு முதியவர்களை கௌரவித்தார்.
இந் நிகழ்வில் தேசோதய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் திரு.ரமணன், கிராம முதியவர்கள், தேசோதய அமைப்பு பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)