
posted 21st November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
இளைஞர் உயிரிழப்பு - பொலிஸார் இருவருக்கு இடமாற்றம்!
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்த விளக்கமறியல் கைதியொருவர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தமை தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸார் இருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் மீது அவரது உறவினர்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
உயிரிழந்தவர் காணொளியில் வழங்கிய வாக்குமூலமும் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், யாழ்ப்பாணப் பிராந்தியத்துக்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், சேவை அவசியம் கருதி பொலிஸார் இருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)