
posted 27th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
இரு வாகனங்களிடையே ஓட்டோ சிக்கியது
யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் நோயாளர் காவு வண்டியுடன் மேலும் இரண்டு வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகின.
நோயாளர் காவு வண்டியை பின்னால் வந்த முச்சக்கரவண்டி முந்திச் செல்ல முற்பட்டவேளை எதிரே வந்த வாகனத்துடன் மோதி நோயாளர் காவு வண்டிக்கும் எதிரே வந்த வாகனத்துக்கும் இடையில் சிக்கி விபத்துக்குள்ளானது.
எனினும், தெய்வாதீனமாக எவருக்கும் பாரதூரமான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)