
posted 22nd November 2022
அமைச்சர் நசீர் அஹமட் ஜப்பானிய தூதுவர் ஹிடேகியையுடனான சந்திப்பு அவரது மைட்லேண்ட் கிரசேன்ட் உத்தியோகபூர்வ இல்லத்தில் இரவு விருந்துபசாரத்துடன் இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது இரு நாடுகளுக்கிடையிலான வரலாற்று ரீதியான உறவுகள் மற்றும் கிழக்கு மாகாணத்தில் ஜப்பானின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
உலகில் பல்லுயிர் மற்றும் காலநிலை மாற்றத்தைப் பாதுகாப்பதற்கு இலங்கை வழங்கிவரும் பங்களிப்புக்கள் பற்றி சுற்றாடல் அமைச்சர் இச்சந்திப்பின் போது விரிவாக விளக்கினார்.
இச்சந்திப்பில் அமைச்சருடன் பாராளுமன்ற உறுப்பினர்களான கபில அத்துக்கோறள மற்றும் எஸ்.எம் .எம். முஸ்ஸரப் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)