
posted 17th November 2022
நியூயோர்க்கிலிருந்து இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான திணைக்களத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் பீட்டர்டுயீட் தலைமையிலான குழுவினருக்கும், முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமுக்குமிடையில் சந்திப்பொன்று இடம் பெற்றுள்ளது.
கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை வளாகத்தில் இந்த முக்கிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் சமூக, பொருளாதார நிலமைகள், சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் உட்பட பல விடயங்கள் தொடர்பிலும் இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டதாக அறியவருகின்றது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)