ஸக்கார் உதவிகளை வழங்குகின்றபோதும் அரச உதவிகள் எட்டப்படுவதில்லை. சட்டத்தரனி எம்.எம்.சபூர்தீன்

எருக்கலம்பிட்டி ஸக்கார் நிறுவனம் தங்களால் இயன்ற அளவு உதவிகள் எம் மக்களுக்கு செய்யப்பட்டு வருகின்றபோதும் இவைகள் இங்குள்ள மக்களுக்கு போதிளவாக இல்லை. அரசின் உதவிகள் எட்டப்படாதபோதும் தனியார் நிறுவனம் எமக்கு கைகொடுக்க வேண்டிய அவசியம் உண்டு என எருக்கலம்பிட்டி ஸக்கார் நிறுவனத்தின் சிரேஷ்ட முக்கியஸ்தரும் மன்னாரில் சிரேஷ்ட சட்டத்தரனியுமான எம்.எம்.சபூர்தீன் இவ்வாறு தெரிவித்தார்.

ஸகாத் பவுண்டேசனின் பூரண ஒத்துழைப்புடன் மன்னார் மாவட்டத்தின் எறுக்கலம்பிட்டி கிராமத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள 200 வீடுகளை கொண்ட வீட்டுத்திட்ட செயற்றிட்டத்துக்கு அமைய முதற்கட்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ள 75 வீடுகளை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சர் கௌரவ பிரசன்ன ரனதுங்க , கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் கௌரவ காதர் மஸ்தான் உள்ளிட்ட அதிதிகள் இணைந்து உத்தியோகப்பூர்வமாக பயனாளிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (06.11.2022) குறித்த வீடுகளை கையளித்த வைபவத்தில்

ஸக்கார் நிறுவனத்தின் சிரேஷ்ட முக்கியஸ்தரும் மன்னாரில் சிரேஷ்ட சட்டத்தரனியுமான எம்.எம்.சபூர்தீன் இங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்

யுத்தக் காலத்தில் வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்களாகிய நாங்கள் பின் காலப்போக்கில் மீண்டும் எங்கள் பகுதியில் மீள்குடியேற்றப்பட்டோம்

அதிலும் ஒருசிலர் மாத்திரமே திரும்பி வந்தனர். காரணம் போதிய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. கல்வி வசதி அற்ற நிலையுடன் தொழில் இன்மையால் பொருளாதாரத்தில் பாதிப்டைந்த நிலையில் சொல்லொண்ணா துன்பங்களின் மத்தியிலேயே அவ் மக்கள் வாழ வேண்டிய நிலையும் காணப்பட்டது.

அப்பொழுது அரசின் உதவிகள் கிடைக்காதபோதும் சில தொண்டு நிறுவனங்களும் தனியாரும் உதவிகரங்கள் இவ் மக்களுக்கு நீட்டினர்.

இற்றைக்கு 15 வருடங்களுக்கு முன்பே இவ் மக்களின் நலன் நோக்கி எருக்கலம்பிட்டி ஸகாத் நிறுவனம் ஒன்றை அமைத்து நாங்கள் உதவிகள் செய்வதற்கு முன்வந்தோம்.

இதனால் இவ் கிராமத்துக்கு பலவிதமான செயற் திட்டங்களை முன்னெடுக்கக்கூடியதாக இருந்தது.

இந்த ஸகாத் என்பது எங்கள் மார்க்கத்தில் இது ஒரு கட்டாய கடமை.

அதாவது சரியான வறுமையுள்ளவர்களை இனம் காணப்பட்டு உள்ளவர்கிடமிருந்து பெறப்பட்டு இவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

இவை சரியாக நடைபெறாவிட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு பாவம் போய் சேரும் என்பது எங்கள் விசுவாசம்.

கடந்த 15 வருடங்களாக இங்கு எங்கள் ஸகாத் நிறுவனத்தின் மூலமாக 15 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

225 வீடுகள் நிறுவனங்கள் மற்றும் உதவி செய்பவர்கள் மூலம் உதவிகள் பெற்று கட்டிக் கொடுக்கப்பட்டது. 237 பேருக்கு எமது அமைப்பின் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்ள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

257 பேருக்கு சுய தொழில் வேலைவாய்ப்புக்காக பணம் மற்றும் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

25 புதிதாக இஸ்லாம் மதத்தை தழுவியவர்களுக்கு எங்கள் அமைப்பு உதவி செய்துள்ளது.

230 விதவைகளுக்கு உதவி செய்யப்பட்டுள்ளது. 201 குடும்பங்களுக்கு குடிநீர் பிரச்சனைகளை தீர்த்து வைத்துள்ளோம்.

96 பேருக்கு மருத்துவ உதவிகள் செய்யப்பட்டுள்ளது. 378 நபர்களுக்கு காணிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. உயர்கல்விக்காக 31 பிள்ளைகளுக்கு உதவிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருமணத்துக்காக கஷ்டப்பட்ட 81 பேருக்கு உதவிகரம் நீட்டப்பட்டன. 154 பேருக்கு தையல் மெசின் வழங்கப்பட்டுள்ளன. வெள்ளம் காரணமாக மூர் வீதி மக்கள் கஷ்டப்பட்டபோது அவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.

இங்கு மட்டுமல்ல புத்தளம் கல்பிட்டி கிராமபுறங்களிலுள்ள பாடசாலைகளுக்கும் எமது அமைப்பு உதவிகள் செய்துள்ளன.

தற்பொழுது இங்கு திறக்கப்படும் வீடமைப்புக்கான 19 ஏக்கர் காணியை எமது ஸக்கார் நிறுவனம் முழமையாக கொள்வனவு செய்து வீடுகள் அமைப்பதற்காக வழங்கியுள்ளோம்.

இங்குமட்டுமல்ல கரம்பை கற்பிட்டி பகுதியிலுள்ள எமது மக்களுக்கு இவ் அமைப்பு உதவிகள் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

எமது இவ் கிராம மக்களுக்காக பல தொண்டு நிறுவனங்கள் தனியார் மற்றும் வெளிநாட்டு உதிவகளை கொண்டு எமது ஸக்கார் நிறுவனம் தொடர்ந்து உதவிகளை செய்து வருகின்றது.

இந்த குவைற் வீட்டுத் திட்டம் எமது கிராமத்துக்கு ஒரு முக்கியமானது. காரணம் எங்களால் சில் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் இது திருப்திப்படக் கூடியதாக இல்லை.

ஏனென்றால் இங்கு பல அத்தியவசிய தேவைகள் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. அரசால் உதவிகள் கிடைக்காதபோதும் குவைத் ஸக்கார் நிறுவனம் மூலம் எமக்கு இவ்வாறான உதவிகள் கிடைப்பது மகிழ்ச்சியாக இருக்கின்றது

கடந்த அரசாங்கங்களின் 10 திட்டங்களில் 355 வீடுகள் இங்கு கிடைக்கப் பெற்றபோதும் இன்னும் இவைகள் பூர்த்தி செய்யப்படாமல் குறைபாடுகளாகவே காணப்படுகின்றது.

இதனால் இவர்கள் தங்கள் திட்டத்தில் பலன் பெறாத நிலையிலும் வேறு உதவிகளை பெற முடியாது புறம் தள்ளப்பட்டு வருவதையும் இங்கு சுட்டிக்காட்டுகின்றேன்

ஆகவே இந்த விடயத்தை சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் கவனத்துக்கு எடுத்துக் கொள்வீர்கள் என்று எதிர்பார்க்கின்றேன் என இவ்வாறு தெரிவித்தார்.

ஸக்கார் உதவிகளை வழங்குகின்றபோதும் அரச உதவிகள் எட்டப்படுவதில்லை. சட்டத்தரனி எம்.எம்.சபூர்தீன்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)