விவசாயிகளின் கவனயீர்ப்புப்  போராட்டம்

எரிபொருள் மற்றும் விவசாய உள்ளீடுகளை வழங்க கோரி விவசாயிகள் இன்று புலோலி கமநல சேவை முன்றலிலிருந்து கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

விவசாயிகளில் அடிப்படை தேவையான மண்ணெண்ணெய், மற்றும் உரம், மருந்துவகை உட்பட்ட உள்ளீடுகளை வழங்க கோரியே காலை 9:00 மணியளவில் புலோலி கமநல சேவை நிலைய முன்றலில் ஆரம்பித்த போராட்டம் பருத்தித்துறை பிரதேச செயலகம் வரை சென்று அங்கு யாழ் மாவட்ட செயலருக்கான மகஜர் ஒன்றினை பருத்தித்துறை பிரதேச செயலரிடம் வழங்கி வைத்ததுடன் போராட்டம் நிறைவிற்க்கு வந்தது.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்;

மறுக்காதே மறுக்காதே மண்ணெண்ணையை மறுக்காதே, வழங்கு வழங்கு உரத்தினை வழங்கு, அடிக்காதே அடிக்காதே ஏழை விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதே, ரணில் பொதுஜன பெரமுன அரசே உரம் கிருமி நாசின்களை போதியளவு கிடைக்க வழி செய், எனப்பல கோசங்களை எழுப்பினர்.

இதில் வடமராட்சி பிரதேசத்திற்க்கு உட்பட்ட விவசாய அமைப்பு பிரதிநிதிகள், பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் ச. அரியகுமார், முன்னாள் மாகாண சபை உரருப்பினர் ச. சுகிர்தன், வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் சதீஸ், பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் சுரேஸ் உட்பட்ட பல அரசியல் கட்சி உறுப்பினர்களும் கட்சி பேதமின்றி கலந்து கொண்டதுடன் விவசாயிகளுடன் மீனவர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

விவசாயிகளின் கவனயீர்ப்புப்  போராட்டம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)