வாளுடன் கல்வியியல் கல்லூரி மாணவன் அட்டகாசம்

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டைக்காடு முள்ளியான் பகுதியில் வாள்லுடன் கல்வியியல் கல்லூரி மாணவன் ஒருவன் அட்டகாசம் புரிந்த சம்பவம் ஒன்று சீசீரீவி காணொளியில் பதிவாகியுள்ளது.

குறித்த சம்பம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

வீட்டில் தனிமையில் இருந்த வயோதிப தாய் ஒருவருவரது வீட்டுக்கு சென்ற குறித்த கல்வியியல் கல்லூரி மாணவன் அவ் வயோதிப தாயை வாளைக் காண்பித்து மிரட்டியுள்ளதுடன் குறித்த வயோதிபத் தாயின் வாசல் கேற்றையும், கதவுகளையும் வாளால் தாக்கி சேதமாக்கியுள்ளான்.

குறித்த சம்பவம் 13.11.2022 அதிகாலை 4.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் குடும்ப தகராறு நேற்று பிற்பகல் ஆரம்பித்திருந்ததன் காரணமாகவே இடம் பெற்றுள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவிப்பதுடன் மாணவன் ஒருவன் வாளுடன் அட்டகாசம் புரிந்தமை மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வாளுடன் கல்வியியல் கல்லூரி மாணவன் அட்டகாசம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)