
posted 21st November 2022
யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம் பகுதியில் இன்று பிற்பகல் 3 மணியளவில் நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற 18 வயது யுவதி ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகியுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது.
கிளிநொச்சியை சேர்ந்த குறித்த யுவதி கற்கோவளம் பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு வந்திருந்த நிலையில் நான்கு நண்பர்களுடன் கடற்கரைக்கு அருகிலுள்ள நீர்த்தேக்கத்தில் நீராடிக் கொண்டிருந்த வேளை நீரில் மூழ்கிய நிலையில் அதனை அவதானித்தித்த நண்பர்கள் கூக்குரலிட்ட நிலையில் அருகிலுள்ள இராணுவத்தினர் அவ் யுவதியை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் குறித்த யுவதி மரணமடைந்துள்ளார்.
இதில் அலன் மேரி ஆனந்தராஜா என்னும் 18 வயதுடைய எனும் யுவதியே மரணமடைந்துள்ளார்.
குறித்த யுவதியின் மரணம் தொடர்பில் பருத்தித்துறை போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலம் தற்போது பருத்தித் துறை ஆதார வைத்திய சாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)