வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு யாழ் இந்திய துணை தூதுவரை சந்தித்து மகஜர் கையளிப்பு

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் பிரதிநிதிகள் வியாழக்கிமை (10.11.2022) யாழ்ப்பாணம் இலங்கை;கான இந்திய துணை தூதரக தூதவரை சந்தித்து நூறு நாட்கள் சிவில் சமூகத்துடன் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களை மகஜராக கையளித்துள்ளனர்.

இவ் குழுவினர் கடந்த நூறு நாட்கள் மக்கள் குரலாக முன்னெடுத்த ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு விடயமான மகஐரை யாழ் இந்திய துணை தூதுவர் திரு. ரகேஸ் நடராஜ் ஜெயபாஸ்கர் அவர்களிடம் கையளித்தனர்.

அப்பொழுது வடக்க கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினர் கடந்த 100 நாட்கள் வடக்க கிழக்கு பகுதியில் முன்னெடுக்க்பட்ட விடங்களின் விபரங்களை தெரிவித்தபோது அவற்றை மிகவும் உண்ணிப்பாக கேட்டறிந்தார்.

அத்துடன் இது தொடர்பாக யாழ் இந்திய துணை தூதுவர் இவ் மகஜரையும் தான் உங்களிடம் பெற்றுக் கொண்ட விடயங்களையும் எமது கொழும்பு இலங்கைக்கான இந்திய துணை தூதரத்துக்கு அனுப்பி வைப்பதுடன் இது தொடர்பாக டில்லிக்கும் தெரியப்படுத்துவதாக உறுதியளித்துள்ளார்.

இவர்கள் கையளிக்கப்பட்டிருந்த மகஜரில் 16 அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

அதாவது வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீள் ஒருங்கிணைக்கப்பட்டு வடக்கு கிழக்கு தனி ஒரு மாகாண அலகாக உருவாக்கப்பட வேண்டும்.

வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும்.

இவ் மாகாண அலகின் ஆட்சியானது மக்கள் பிரதிநிதிகள் சபையால் மேற்கொள்ளப்பட வேண்டும். இதில் ஐம்பது வீதம் பெண்கள் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

முதலமைச்சர் சபையின் தலைமை உறுப்பினராக திகழ வேண்டும்.

ஆளுநர் சபையை கட்டுப்படுத்தாதவராகவும் அவர் மத்திய அரசின் பிரதிநிதியாகவும் இருக்க வேண்டும்.

இவ் மாகாணத்துக்கு உட்பட்ட காணிகள் மாகாண ஆட்சியின் கட்டுப்பாட்டுக்குள் அமைய வேண்டும்.

அபிவிருத்திசார் சர்வதேச ஒப்பந்தங்களை மாகாண ஆட்சி மேற்கொள்ள வேண்டும்.

காணி மற்றும் மாகாண ஆட்சியின் அதிகாரத்துக்கு உட்பட்ட ஏனைய விவகாரங்கள் மாகாண ஆட்சிக்கு வழங்க வேண்டும்.

பொலிஸ் சேவைகள் மாகாண ஆட்சியின் கட்டுப்பாட்டுக்குள் உட்படுத்த வேண்டும்.

1983 ஆம் ஆண்டுக்கு முன்னர் இராணுவம் எங்கிருந்ததோ அங்கு நிலைகொள்ள வேண்டும்.

நீதித்துறை அரச நிர்வாகம் கல்வி பொது சுகாதாரம் பொது போக்குவரத்து தொலை தொடர்பு மின்சாரம் எரிபொருள் மாகாண ஆட்சிக்குட்படுத்த வேண்டும்.

என இவ்வாறு 16 கோரிக்கைகளை முன்வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு யாழ் இந்திய துணை தூதுவரை சந்தித்து மகஜர் கையளிப்பு

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)