றிஷாட் பதியுதீன் சந்திப்பு

பாடசாலை மாணவர்களுக்கான இஸ்லாம் பாடப் புத்தகத்தினை மீள் விநிேயாகம் செய்தல் தொடர்பில் நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டத்தரணி ஷஹ்பி எச். இஸ்மாயில் தலைமையிலான குழுவினருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீனுக்கும் இடையிலான சந்திப்பு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இதன்போது பாடசாலை மாணவர்களுக்கான இஸ்லாம் பாடப் புத்தகங்களை மீள விநியோகம் செய்தல் தொடர்பில் துரித கவனம் செலுத்துமாறும் முஸ்லிம் பராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர், அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபை பிரதிநிதிகள் மற்றும் நீதிக்கான மய்யத்தின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினரை இணைத்து கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவுடன் சந்திப்பினை ஏற்படுத்தித் தருமாறும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீனிடம் நீதிக்கான மய்ய பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டனர்.

இதனை ஏற்றுக்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன், கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவுடன் சந்திப்பினை ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்தார்.

இச்சந்திப்பில் நீதிக்கான மய்யத்தின் பொதுச்செயலாளர் கலாநிதி றியாத் ஏ. மஜீத், பிரதித் தலைவர் யூ.கே.எம். றிம்சான், பொருளாளர் தொழிலதிபர் ஏ.ஏ. அஷ்ரஃப் அலி, சட்டத்தரணிகளான றைசான், நஜீமா ஆகியோர் கலந்து கொண்டனர்.

றிஷாட் பதியுதீன் சந்திப்பு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)