
posted 7th November 2022
பொத்துவில் வை.எம்.எம்.ஏ. (பேரவை) கிளையின் ஏற்பாட்டில் பாரிய சிரமதானப் பணி ஒன்று வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
பொத்துவிலில் வை.எம்.எம்.ஏ. கிளைத்தலைவர் ஏ. மாபீர் தலைமையில், பொத்துவில் பசறிச்சேனை பொது மையவாடியில் இந்த சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.
இந்த மையவாடி துப்பரவு சிரமதானப் பணியின் இரண்டாம் நாள் நிகழ்வில், அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் அம்பாறை மாவட்டப் பணிப்பாளர் தேச கீர்த்தி எம்.ஐ.எம். றியாஸ் (அதிபர்) பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன்,
சிரமதான வேலைத்திட்டத்தை முன்னெடுத்த பொத்துவில் வை.எம்.எம்.ஏ கிளையினருக்கும், சிரமதானப் பணியில் பங்கு கொண்டோருக்கும் பெரும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
மேலும் இந்த சிரமதான நிகழ்வில் பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், ஆலோசகருமான எம்.எஸ்.எம். அப்துல் வாசித், மற்றும் அதிதிகளுடன் வை.எம்.எம்.ஏ. நிருவாகத்தினர் நூறுல் ஹூதா அரபுக் கல்லூரி நிருவாகத்தினர் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
சிரமதானப் பணி வெற்றிகரமாகவும், சிறப்பாகவும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)