
posted 24th November 2022
வல்லைப் பாலத்தில் நண்பர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞர் தவறி விழுந்து நீரில் மூழ்கி காணாமல்போன நிலையில் புதன்கிழமை (23) காலை கடற்படையினரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
புத்தூர் கலைமதி பகுதியைச் சேர்ந்த 19 வயதான பாஸ்கரன் திலக்சன் என்ற
இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
சடலமாக மீட்கப்பட்ட இளைஞரின் கைகள் தங்கூசி வலையால் பின்னப்பட்டிருப்பதாலும், முகத்தில் காயங்கள் இருப்பதாலும் சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கையின் பின்னரே உயிரிழப்புக்கான காரணம்
தெரியவருமென எதிர்பார்க்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லைப் பாலத்தில் நண்பர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞரொருவர் தவறி விழுந்து காணாமல் போன நிலையில் செவ்வாய்க்கிழமை (22) மாலை முதல் அவரைத் தேடும் பணி இடம்பெற்றது.
இந்நிலையில், தவறிவிழுந்த இளைஞரை தேடும் பணியில் இரவு முழுவதும் அச்சுவேலி பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து ஈடுபட்ட போதும் முயற்சி பலனளிக்காத நிலையில் கடற்படையினரின் உதவியுடன் இளைஞர் சடலமாக மீட்கப்பட்டார்.
செவ்வாய்க்கிழமை மாலை வேளையில் சில இளைஞர்கள் தூண்டில் போட்டு மீன் பிடியில் ஈடுபட்டனர். இதன்போது ஓர் இளைஞர் தவறி விழவே ஏனையவர்கள் அச்சத்தில் அங்கிருந்து தப்பிச் செல்ல முனைந்தனர் என்று கூறப்படுகிறது. அவர்கள் பொலிஸாரால் பிடிக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY