
posted 27th November 2022
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
ஞாயிற்றுக் கிழமை (27) வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்பட்டு தற்போது இராணுவத்தினரின் 51ஆவது படைப்பிரிவின் தலைமையகம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் கப்டன் பண்டிதரின் இல்லத்தில் இன்று ஞாயிறு மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
வல்வெட்டித்துறையில் உள்ள கப்டன் பண்டிதரின் இல்லத்தில் நேற்று மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் பண்டிதரின் தாயாரால் பண்டிதரின் திருவுருவப்படத்திற்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

மாவீரர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு நகரப் பகுதியில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
தமிழர் பிரதேசங்களில் பாதுகாப்புத் தரப்பினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் நேற்று ஞாயிறுமாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.
முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி ஒவ்வொரு வருடமும் மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாவீரர்களை நினைவுகூரும் வகையில் முல்லைத்தீவு நகர வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
கிளிநொச்சி தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்நாள் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
கிளிநொச்சி கனகபுரம் மாகவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்நாள் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
கிளிநொச்சி முழங்காவில் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்நாள் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
யாழ், வடமராட்சி கிழக்கு, உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லம்!
தீருவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY