
posted 25th November 2022
கரைச்சி பிரதேச சபையின் அமர்வில் மாவீரர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
கரைச்சி பிரதேச சபையின் அமர்வு நேற்றுக் காலை தவிசாளர் வேழமாலிகிதன் தலைமையில் ஆரம்பமானது.
இதன்போது, கனகபுரம் மற்றும் தேராவில் மாவீரர் துயிலும் இல்லங்களை கரைச்சி பிரதேச சபையின் ஆளுகையின் கீழ் கொண்டுவந்து, மனிதவளம், இயந்திர வளங்களை அங்கு பயன்படுத்தல் மற்றும் மரக்கன்றுகளை வழங்கல் எனும் தீர்மானமும், பிரதேச சபை ஒதுக்கீட்டில் மாவீரர்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில் ஒதுக்கீடுகளை மேற்கொள்ளவும் தவிசாளரினால் பிரேரணை முன்வைக்கப்பட்டது.
குறித்த பிரேரணை அனைத்து கட்சி பிரதிநிதிகளின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக தவிசாளர் சபையில் அறிவித்தார்.
தொடர்ந்து, சபையில் மாவீரர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY