மானிடத் தன்மையை மேம்படுத்த மட்டக்களப்பு பல்சமய ஒன்றியம் நல்லெண்ண கள விஜயம்.

வடக்கு கிழக்கிலுள்ள எட்டு மாவட்டங்களிலுள்ள பல்சமய குழுவினரை சந்தித்து ஒரு கூட்டு அமைப்பை உருவாக்குவதும் மானிடத் தன்மையை மேம்படுத்தவும் அரசியல் பொருளாதார சமூக முன்னேற்றைத்தை முன்னெடுத்துச் செல்லவும் நோக்கமாகக் கொண்டு மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியம் இரண்டு நாள் கள பயணம் ஒன்றை மேற்கொண்டது.

மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் சிறப்பாக பல் சமய தலைவர்கள் இரண்டு நாட்கள் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

இவர்கள் திருகோணமலை மாவட்டத்துக்கு வியாழக்கிழமை (03.11.2022) மேற்கொண்டிருந்தனர். இதற்கான அனுசரனையை கறிற்றாஸ் நிறுவனம் அனுசரனை வழங்கியிருந்தது.

மட்டக்களப்பு பல்சமய ஒன்றியத்தின் முக்கிய நோக்கமானது திருகோணமலை பல்சமய ஒன்றியத்தினை சந்தித்து இரு மாவட்டங்களின் மத்தியிலுள்ள பல்சமய குழுவினருக்கிடையே ஒருவருக்கொருவர் உறவை பலப்படுத்துவது

இத்துடன் வடக்கு கிழக்கிலுள்ள எட்டு மாவட்டங்களிலுள்ள பல்சமய குழுவினரை சந்தித்து ஒரு கூட்டு அமைப்பை உருவாக்குவதே நோக்கமாக காணப்பட்டது

இவ் சந்திப்பில் முக்கியமாக திருகோணமலையைச் சார்ந்த பல்சமய நிர்வாகத்தினரையும் மற்றும் திருமலை ஆயர் மேதகு நோயல் இம்மனுவேல் ஆண்டகையும் சந்தித்து உரையாடினர்.
.
இவர்களின் சந்திப்பில் தங்களின் செயல்பாடுகளையும் அனுபவ பகிர்வுகளையும் இரு தரப்பினரும் பகிர்ந்து கொண்டனர்.

அத்துடன் வடக்கு கிழக்கு பல்சமய ஒன்றிப்பின் ஆரம்ப கட்டமாகவும் இது அமைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் வடக்கு கிழக்கு பல்சமய கூட்டு ஏற்படுத்துவதற்கான முக்கிய காரணமாக அமைவது சமயங்களுக்கிடையேயுள்ள முரன்பாடுகள் பிரிவினைகளை உருவாக்குவதற்கு பல சக்திகள் முனைந்து கொண்டிருக்கின்றன.

இவற்றை முறியடித்து மானிடத் தன்மையை மேம்படுத்தவும் அரசியல் பொருளாதார சமூக முன்னேற்றைத்தை முன்னெடுத்துச் செல்லவும் இவ் கூட்டு முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இரண்டாம் நாள் அதாவது வெள்ளிக்கிழமை (04.11.2022) இவ் குழுவினர் திருகோணமலை ஓய்வுநிலை ஆயர் மேதகு கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகையை மரியாதையின் நிமித்தம் சந்தித்து அவருடைய ஆசீரையும் பெற்றுக் கொண்டது.

மட்டக்களப்பு பல்சமய ஒன்றியம் 1986 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டபோது ஆயர் மேதகு கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்கள் அப்பொழது மட்டக்களப்பு திருமலை ஆயராக கடமையாற்றியாற்றிக் கொண்டிருந்த வேளையிலேயே இவ் ஒன்றியம் அவரால் உருவாக்கப்பட்டது என்பது இவ்விடத்தில் நினைவு கூறப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையில் திருக்கோணேஸ்வர ஆலய ஆக்கிரமிப்பு செயல்பாடு அன்மைக்காலமாக இடம்பெற்று வருகின்றது எனவும் இவற்றை நேரடியாகச் சென்று பார்வையிட்டதுடன் இதற்கு எதிரான செயல்பாட்டை முன்னெடுத்து அமைதியை கொண்டுவரும் நோக்கத்திலும் இவ்விடத்துக்கு இவ் விஜயம் இடம்பெற்றது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.

இக் குழுவினர் திருகோணமலையிலுள்ள கத்தோலிக்க இந்து பௌத்தம் இஸ்லாம் ஆகிய மதத் தளங்களுக்குச் சென்று மதங்களுக்கிடையேயுள்ள வேறுபாடுகளை களைந்து அங்கிருந்த மதத் தலைவர்களுடன் ஒன்றுகூடி கலந்துரையாடினர்.

மானிடத் தன்மையை மேம்படுத்த மட்டக்களப்பு பல்சமய ஒன்றியம் நல்லெண்ண கள விஜயம்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)