மருதமுனை ஒலிம்பிக் வசமானது

வீச் யங்கர்ஸ் மருதமுனை அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கலாநிதி சிராஸ் மீராசாஹிப் வெற்றிக்கிண்ண கடற்கரை உதைபந்து சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி கல்முனை மாநகர சபை உறுப்பினரும், சுற்றுப்போட்டி ஏற்பாட்டு குழுவின் தலைவருமான ஏ.ஆர்.ஏ. அமீர் தலைமையில் இடம்பெற்றது.

மருதமுனை மருதம் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக்கழகம் மோதிய இவ் இறுதி ப் போட்டியில் 02 : 01 என்ற தண்டனை உதை கோல் கணக்கின்மூலம் மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்று சம்பியனானது.

இப் போட்டிகளில் கல்முனை மாநகர சபை முன்னாள் முதல்வரும்,ஸ்ரீ.மு.கா.உச்சபீட உறுப்பினரும் மெற்றோபொலிட்டன் கல்லூரி தவிசாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதியாக அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம். சபீஸும் கலந்து கொண்டார்.

மேலும் அம்பாறை மாவட்ட உதைப்பந்து லீக் தலைவர் வை.கே. ரஹ்மான், பொதுச் செயலாளர் எம்.எச்.எம்.அப்துல் மனாப், பொருளாளர் எஸ். முஹம்மட் கான், லீக்கின் பிரதித்தலைவரும், மாவட்ட நடுவர் குழு தவிசாளருமான எம்.பீ. எம். ரஸீட், லீக்கின் பிரதித்தலைவரும் மேன்முறையீட்டு சபை தவிசாளருமான நியாஸ் எம். அப்பாஸ், ரோஷன் லங்கா நிறுவன உரிமையாளர் முஹம்மட் ரொஷான், ஐ.டி.க்கியூ லெப் நிறுவன பணிப்பாளர் சபூர் ஆதம், ஊடகவியலாளர் யூ.எல்.என் ஹுதா, மெற்றோபொலிட்டன் கல்லூரி கல்முனை கிளை அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இச்சுற்றுப்போட்டியின் மூன்றாம் இடத்தை மருதமுனை கிரீன் மெக்ஸ் விளையாட்டு கழகம் பெற்றுக் கொண்டது குறிப்பிடதக்கதாகும்.

மருதமுனை ஒலிம்பிக் வசமானது

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)