
posted 6th November 2022
புதிய வீடமைப்பு திட்டங்களை ஆரம்பிப்பதைவிட ஆரமப்பிக்கப்பட்டு இடைநடுவில் உள்ள வீடுகளை பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தியுள்ளோம். ஆகவே இவ் வீடுகளை பூர்த்தி செய்து கொடுப்பதற்கு 1600 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்து இவ் திட்டத்தை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. ஆதிகார பரவாக்கல் மூலம்தான் நாட்டில் ஒருங்கணைந்த ஒரே மக்களாக சேவையாற்றக்கூடிய தன்மை உருவாகும் என நான் உறுதியாக நம்புகின்றேன் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சர் கௌரவ பிரசன்ன ரனதுங்க இவ்வாறு தெரிவித்தார்.
கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் கௌரவ காதர் மஸ்தான் அவர்களின் கோரிக்கைக்கு அமைய குவைட் நாட்டின் ஸகாத் ஹவுஸின் நிதியுதவியோடு ஐஎஸ்ஆர்சி நிறுவனத்தின் அனுசரணையில் எறுக்கலம்பிட்டி ஸகாத் பவுண்டேசனினின் பூரண ஒத்துழைப்புடன் மன்னார் மாவட்டத்தின் எறுக்கலம்பிட்டி கிராமத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள 200 வீடுகளை கொண்ட வீட்டுத்திட்ட செயற்றிட்டத்துக்கு அமைய முதற்கட்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ள 75 வீடுகளை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சர் கௌரவ பிரசன்ன ரனதுங்க , கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் கௌரவ காதர் மஸ்தான் உள்ளிட்ட அதிதிகள் இணைந்து உத்தியோகப்பூர்வமாக பயனாளிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (06.11.20220 குறித்த வீடுகள் கையளிக்கும் வைபவம் இடம்பெற்றது
இதன்போது. இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சர் கௌரவ பிரசன்ன ரனதுங்க தொடர்ந்து உரையாற்றுகையில்
நான் முதலில் உங்கள் மத்தியில் கடமை புரிந்து வரும் உங்கள் தொகுதி அமைச்சர் காதர் மஸ்தான் அவர்களுக்கு நன்றி கூற கடமைபட்டவன்.
அத்துடன் இரண்டு நிறுவனங்களுக்கு நான் மேலும் நன்றிகூற வேண்டியவன். ஸகாத் நிறுவனத்துக்கும் மற்றையது ஐஎஸ்ஆர்சி என்ற அமைப்புக்கும்.
இவர்களால்தான் இன்றைய இவ் வீட்டுத் திட்டம் இடம்பெற்றுள்ளது.
அமைச்சர் காதர் மஸ்தான் அவர்கள் தனது குழுவுடன் எனது வீட்டுக்கு வந்து இவ் வீட்டுத் திட்டம் தொடர்பாக எனக்கு தெளிவூட்டினார்.
இவர்கள் அங்கு என்னிடம் குறிப்பாக கேட்டுக் கொண்டது இவ் வீட்டுத் திட்டத்துக்கான குடிநீர் விநியோகம் மற்றறையது மின்சாரம் வழங்கல் தொடர்பாகவும் எனது அமைச்சின் மூலமாகவும் மேற்கொள்ள கேட்டுக் கொண்டனர்.
இதையிட்டு இவ்விரு ஆரம்ப திட்டங்களும் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் காதர் மஸ்தான் அவர்களும் மன்னார் அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டீமெல் அவர்களும் இவ் மாவட்டத்தில் 2018 ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்ட 2190 வீடுகள் பூர்த்தி அடையாது இருப்பதால் நிதி சம்பந்தமாக தெரிவித்தனர்.
கடந்த காலத்தில் இடம்பெற்றவைப்பற்றி நான் இங்கு விமர்சிக்க விரும்பவில்லை. இருந்தும் குறிப்பிட்ட விடயத்தில் சரியான திட்டமின்மையால் இந்த 2190 வீடுகள் தொடர்பாக நான் உங்களுக்கு கூற விருப்புகின்றேன்.
எந்த அரசாங்கமாக இருக்கலாம் அல்லது அமைச்சர்களாக இருக்கலாம் அபிவிருத்திக்காக உங்களுக்கு செலவழிக்கும் பணம் உங்களுடையேதாகும்.
நீங்கள் கடைகளில் வாங்கும் பொருட்களில் பெறப்படும் மறைமுகமான வரியே உங்களுக்கு செலவழிக்கப்படுகின்றது.
ஆகவே நாங்கள் செலவழிப்பது மக்களின் பொதுப் பணம். மறைமுகமாக பெறப்படும் இந்த நிதியை மக்களுக்காக செலவழிக்கும் அதேவேளை நாங்கள் இவ் பணத்தை வீண் செலவு செய்யக்கூடாது.
2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத் திட்டங்கள் இன்னும் ஐந்து வருடங்கள் கடந்ததும் இடிந்து விழும் அபாயத்தில் இருக்கின்றன.
இதனால் இதற்கு செலவழிக்கப்பட்ட பணம் வீண் விரயமாக போகின்றது.
ஆகவே இவ்வாறான வேலைத் திட்டங்களை மேற்கொள்பவர்கள் இவ்வாறான மக்கள் நிதி வீணாகாமல் இருப்தை பார்த்துக்கொள்வது ஒவ்வொருவரினதும் தார்மீக கடமையாகும்.
அமைச்சர் காதர் மஸ்தான் என்னிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்தார். அதாவது புதிய வீட்டுத் திட்டங்களை தற்பொழுது அமைப்பதைவிட மன்னார் மாவட்டத்தில் பூர்த்தி செய்யப்படாது காணப்படும் 2190 வீடுகளையும் பூர்த்தி செய்து கொடுப்பதே சிறந்தது என தெரிவித்துள்ளார்.
ஆகவே இவ் வீடுகளை பூர்த்தி செய்து கொடுப்பதற்கு 1600 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்து இவ் திட்டத்தை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
ஆகவே புதிய வீடமைப்பு திட்டங்களை ஆரம்பிப்பதைவிட ஆரமப்பிக்கப்பட்டு இடைநடுவில் உள்ள வீடுகளை பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தியுள்ளோம்.
இடைநடுவில் கைவிடப்பட்ட 2190 வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கு ஏதோ விதத்தில் அநியாயம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஏற்கனவே வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளமையால் இவர்கள் வேறு திட்டங்களுக்கு உள்ளாக்கப்பட மாட்டார்கள் என அரச அதிபர் இங்கு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்பொழது உள்ள பொருளாதார நிலையை கவனத்தில் எடுத்துக் கொண்டு இரண்டு வருடங்களுக்குள் அரச அதிபரின் மேற்பார்வையில் இவ் வீட்டுத் திட்டங்களை பூர்த்தி செய்வோம்.
அமைச்சர் காதர் மஸ்தானுக்கும் ஜனாதிபதிக்கும் இடையே மிகவும் நெருக்கமான உறவு காணப்படுகின்றது.
அமைச்சர் காதர் மஸ்தானுடன் இணைந்து இங்கு வேலைத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லுமாறு ஜனாதிபதி எனக்கு பணித்துள்ளார்.
இதற்கமைய நான் அமைச்சர் காதர் மஸ்தான் மற்றும் இங்குள்ள அரச அதிகாரிகளுடன் கலந்துரையாட இருக்கின்றேன்.
இதைத் தொடர்ந்து எதிர்காலத்தில் இங்கு மேற்கொள்ள இருக்கும் வேலைத் திட்டங்களை முன்னெடுக்க இருக்கின்றோம்
சிங்களம் தமிழ் முஸ்லீம் மக்கள் நாம் எல்லோரும் இந்த நாட்டில் ஒரே குடிமக்கள்.
மாகாண சபைக்கு நான் ஒரு அமைச்சராக இருந்தபொழுது நான் சிங்களம் தமிழ் முஸ்லீம் மக்கள் யாவரையும் ஒன்றிணைத்து சேவை செய்தவன்.
நான் அடிக்கடி தெரிவிப்பது நமது நாட்டில் அதிகார பரவாக்கல் நடைபெற வேண்டும் என்பதே அப்பொழுதுதான் அந்த பிரதேசங்களில் இருக்கும் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய வரப்பிரசாதம் கிடைக்கும்.
ஆதிகார பரவாக்கல் மூலம்தான் நாட்டில் ஒருங்கணைந்த ஒரே மக்களாக சேவையாற்றக்கூடிய தன்மை உருவாகும் என நான் உறுதியாக நம்புகின்றேன்.
சுpல அடிப்படைவாதிகளும் சூழ்ச்சியாளர்களும்தான் இந்த எமது உறவுகளை சீர்குழைக்கின்றனர். ஆகவே நாம் புத்திசாலிகளாக வேலை செய்யும்போது அவர்களின் திட்டங்கள் தவிடுபொடியாகி விடும் என இவ்வாறு தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)