
posted 17th November 2022
மன்னார் பொது வைத்தியசாலைக்கு அங்கு தேவையின் பொருட்டு கொழும்பு தெற்கு றோட்டறிக் கழகத்தின் நிதி உதவியுடன் மடிக்கணனி அன்பளிப்பு செய்து வைக்கப்பட்டது.
மன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் செயற்பாட்டினை மேம்படுத்தும் பொருட்டும் மற்றும் தகவல் சேகரித்தல் செயற்பாடு, இலத்திரணியல் முறையிலான தகவல் பரிமாற்றல் சேவையினை இலகுபடுத்தும் நோக்கிலும் மன்னார் பொது வைத்தியசாலை முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைவாக வியாழக்கிழமை (17.11.2022) மடிக்கணனி ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டது.
இதற்கான பிரதான நிதி அன்பளிப்பினை கொழும்பு தெற்கு றோட்டறிக்கழகம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இன்றையதினம் கொழும்பு தெற்கு றோட்டறிக்கழக அங்கத்தவர்கள் மற்றும் மன்னார் றோட்டறிக்கழக அங்கத்தவர்கள் குறித்த செயற் திட்டத்தில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் தொற்றுநீக்கித்திரவம் 5 பெட்டிகளும் இவர்களால் வழங்கி வைக்கப்பட்டன.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)