
posted 10th November 2022
மன்னார் வேதசாட்சிகளை கதையாக்கி மன்னார் கலைஞர்களையே உள்வாங்கி கத்தோலிக்க படமாக்கி வெளியிடப்பட்டு 32 தினங்களாகிய நிலையில் வெளி மாவட்டங்களில் மத வேறுபாடுகளை மறந்து இவ் படத்தை பார்ப்பதில் அவ் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றபோதும் மறைசாட்சிகளின் மண் என பெருமை பேசும் மன்னார் கத்தோலிக்க மக்கள் இந்த மறைசாட்சிகளின் கதையைக் கொண்ட வித்துக்கள் படம் பார்த்தவர்கள் 83 பேர் மாத்திரமே. கவலையுடன் கண்ணீர் சிந்தப்படுகின்றது என இவ் திபை;படத்துக்கு பொறுப்பாளராக இருந்து செயல்பட்டு வந்த கொழும்பு உயர் மறைமாவட்ட அருட்பணி பிரசாத் ஹரிசன அடிகளார் இவ்வாறு கவலைப்பட்டுக் கொண்டார்.
வியாழக்கிழமை (09.11.2022) மன்னார் மறைமாவட்ட கலையருவி இயக்குனர் அருட்பணி செல்வநாதன் தலைமையில் மன்னார் தியேட்டரில் இவ் வித்துக்கள் பட நடிகர்கள் குடும்பத்தாருடன் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அருட்பணி பிரசாத் ஹரிசன அடிகளார் உரையாற்றுகையில்
22 அண்டுகளுக்கு முன் இறைவன் எனக்கு இந்த வித்தை விதைத்தார். நான் 22 வருடங்களுக்கு முன்பு அருட்சகோதரனாக இருந்தபொழுது தமிழ் கற்றுக்கொள்ள வந்திருந்தேன் அருட்பணியாளர் ஒருவர் என்னை மன்னார் தோட்டவெளிக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு நான் என்றும் கேட்காத கதை ஒன்றை கேட்டேன். அதாவது மறைசாட்சிகள் இந்த தோட்டவெளி இடத்தில்தான் கொலை செய்யப்பட்டார்கள் என தெரிவித்தபொழுது அப்பொழுது எனது கண்ணால் கண்ணீர் சிந்தியது. நமது நாட்டிலும் மறை சாட்சிகள் மரணித்துள்ளனரே என தெரியவந்தது.
கடந்த இருவருடங்களுக்க முன்பு ஈஸ்ரர் குண்டு தாக்குதலுக்குப் பிறகு இறந்தவர்கள் ஒருபுறமிருக்க காயப்பட்ட மக்களுக்கு என்ன சொல்லுவது என நாங்கள் திகைத்து இருந்தோம்.
இதன் பிறகு இதில் பாதிப்படைந்த மக்கள் தங்கள் விசுவாசத்தை இழந்து வீட்டில் இறைவனுக்கு ஏற்றி வந்த விளக்குகைள அனைத்தனர் தினமும் சொல்லும் செபமாலையையும் தவிர்த்துக் கொண்டனர்.
இந்த குண்டு தாக்குதலில் இறந்தவர்களை ஒரே குழியில் புதைக்கும் பொழுது எனக்கு ஞாபகம் வந்தது 475 வருடங்களுக்கு முன்பு மன்னார் மறைமாவட்டத்தில் தோட்டவெளியில் நடந்த சம்பவம்.
பாதிப்படைந்த மக்களின் காயங்களுக்கு மருந்து செய்தாலும் வைத்தியர்கள் மற்றயவர்கள் அறுதல் சொன்னாலும் அவர்களின் மனதில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை அளிக்க யாராலும் முடியவில்லை.
இதன் பிறகுதான் நாங்கள் 23 பஸ் வண்டிகளில் அங்கு காயப்பட்ட மக்களை தோட்டவெளிக்கு அழைத்து வந்தோம்.
இங்கு ஒருநாள் முழுதும் இருந்து தாக்குதலில் பாதிப்படைந்த மக்களுக்கு 475 வருடங்களுக்கு முன்பு இங்கு இருந்த விசுவாசிகளுக்கு நடந்த சம்பவங்களைச் சொல்லி அவர்கள் மறைசாட்சிகளாக மரணித்த சம்பவங்களை கூறியதுடன் அவர்களிடம் செபித்துக் கொண்டோம்.
அன்று கத்தோலிக்கர் இல்லாது கொன்ற இடமாகிய மன்னார் மாவட்டம் இன்று கத்தோலிக்கர் நிறைந்த ஒரு மாவட்டமாக காணப்படுகின்றது என விளக்கி கூறப்பட்டது.
அப்பொழுதுதான் இந்த மக்களுக்கும் விசுவாசத்தின் மகத்துவம் புரிய ஆரம்பித்தது. அத்துடன் அடுத்த நாள் இவ்விடத்துக்கு வந்த மறையாசிரியர்கள் இவர்களுடன் உரையாடினர்.
அதாவது முப்பது வருடங்கள் நாங்கள் யுத்தத்தால் பாதிப்படைந்து உயிர் உடமைகளை இழந்தோம் ஆனால் நாங்கள் விசுவாசம் தளராது வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் என தெரிவித்தனர்.
அப்பொழுது எமது மக்கள் சிலரிடம் தமிழ் சிங்களம் என வேறுபாடு இருந்தது. ஆனால் தோட்டவெளிக்கு வந்து சென்ற பின் அவர்களிடம் இந்த வேறுபாடு களைந்தது.
எங்கள் மத்தியில் 475 வருடங்களாக மறைந்து இருந்த மறைசாட்சிகள் சம்பவத்தை நாங்கள் திரைப்படமாக உலகம் அறியக் கொண்டு வந்தோம்.
இதற்கு எமது கருதினால் மற்றும் மன்னார் ஆயர் இதற்கான அனுமதியை எமக்குத் தந்து எமக்கு இந்த வித்துக்கள் என்ற திரைப்படத்தை தயாரிக்க ஆதரவும் தந்தனர்.
2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இவ் திரைப்படம் இந்த வேதசாட்சிகளைப்பற்றி அதிகமாக அறிந்து கொள்வதற்காக இந்தியா யாழ்ப்பாணம் மற்றும் மன்னாருக்கும் வந்து இதன் இயக்குனர் அதிக அக்கறைக் காட்டினார்.
இவ் படப்பிடிப்பை நாங்கள் ஆரம்பிக்க இருந்தவேளையில் எம்மிடம் பணம் இருக்கவில்லை கொவிட் காரணமாக இங்கு வந்து செல்ல முடியாத நிலை. வுந்து செல்வதற்கு அனுமதியும் கிடைக்கப்பெறவில்லை.
இருந்தும் இந்த வேதசாட்சிகளின் இடத்திலேயே இவ் படப்பிடிப்பை ஆரம்பிக்க வேண்டும் என்றும் இந்த மறைசாட்சி மண்ணிலுள்ள கலைஞர்களை வைத்தே இவ் படத்தை தயாரிக்க வேண்டும் என்ற கனவுடனே நாங்கள் இருந்தோம்.
இவ்வாறு நாங்கள் படத்தயாரிப்புக்கு முன் இதன் கதையை வேதசாட்சிகளின் கல்லறையிலும் மடு அன்னையின் பாதத்திலும் வைத்துவிட்டே படப்பிடிப்பை தோட்டவெளயிலிருந்து ஆரம்பித்தோம்.
அதன்பின் இவ்வாறே நடைபெற்றது. அத்துடன் இவ் படத்தின் முதல் ஒரு பகுதியை நாங்கள் பாப்பாண்டவருக்கு பார்வைக்காக அனுப்பியபொழுது அதை பார்த்த திருதந்தை உடனடியாக அங்கிருந்து ஒரு குருவானவரை மன்னாருக்கு அனுப்பி மரணித்த வேதசாட்சிகளைப்பற்றி அதிகம் அறிந்து வரும்படி.
700 மறைசாட்சிகள் மன்னாரில் இறந்தது வெளி உலகில் அதிகமானோருக்கு தெரியாதிருந்தது. ஆனால் இந்த திரைப்படத்தை பார்த்தபின் பலர் அறிந்து கொள்ள வாய்ப்பு எற்பட்டுள்ளது.
இப்பொழுது கவலைக்குரிய ஒரு விடயத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகின்றேன். வெளிவந்துள்ள இந்த வித்துக்கள் என்ற மறைசாட்சிகளின் படமானது வெளி மாவட்டங்களில் கத்தோலிக்கர் சாராத பலர் பார்வையிடுகின்றனர்.
ஆனால் மன்னாரில் சுமார் 75 ஆயிரம் கத்தோலிக்கர்கள் வாழ்கின்றனர். ஆனால் இங்கு இவ் படம் வந்து 32 நாட்களாகின்றது. இந்த படத்தில் இங்குள்ள களைஞர்கள் 200 க்கு மேற்பட்டவர்கள் நடித்துள்ளனர். இந்த நாட்களில் இவ் படம் பார்த்தவர்களின் எண்ணிக்கை 82 பேர் மாத்திரமே. இதற்கு என்ன காரணம் என்று எமக்கு புரியவில்pல.
காரணம் என்ன என்று புரியாவிட்டாலும் கண்ணீர் மட்டும் சிந்துகின்றது. இருந்தும் நாங்கள் ஆயர் மற்றும் தியேட்டர் உரிமையாளர்களுடன் புதன்கிழமை (09) கலந்தாலோசித்துள்ளோம்.
புhடசாலை மாணவர்களுக்கு மற்றும் மறைக்கல்வி மாணவர்களுக்கு 250 ரூபா டிக்கேட் பெற்று இவ் படத்தை பார்க்க முடியும் என தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)