
posted 30th November 2022
மன்னார் மாவட்ட சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மன்னார் பட்டித்தோட்டத்தில் அமைந்துள்ள வயோதிபர் இல்லத்தில் 'சிரேஷ்ட பிரஜைகளுடன் ஒரு நாள்' என்ற திட்டத்தின் கீழ் இடம்பெற்ற நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் சமூர்த்தி திணைக்களத்தின் அதிகாரி மற்றும் உத்தியோகத்தர்கள் மன்னார் மாவட்ட செயலக அதிகாரிகள் மன்னார் பிரதேச செயலாளர் மா. பிரதீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வு நடைபெற்ற அன்று (23) வயோதிபர்களுக்கு அன்றையத் தினம் பகல் உணவு வழங்கப்பட்டதுடன் இச் சிரேஷ்ட பிரஜைகளுடன் அங்கு கலந்து கொண்ட அதிகாரிகளும் இச் சிரேஷ்ட பிரஜைகளை கண்காணிக்கும் அருட்சகோதரிகளும் ஒன்றிணைந்து இவ் விருந்து உபசாரத்தில் கலந்து கொண்டனர்.
அத்துடன் அரசாங்க அதிபர், மாவட்ட செயலக இசை குழுவினர், வயோதிபர் இல்லத்தில் உள்ள சிரேஷ்ட பிரஜைகளும் இசை விருந்து அளித்தனர்.
இச் சிரேஷ்ட பிரஜைகள் ஒவ்வொருவருக்கும் ஐயாயிரம் ரூபாவுக்கு மேற்பட்ட நாளாந்தம் பாவிக்கும் பொருட்கள் கொண்ட பொதிகளும், சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தில் கடமைபுரியும் அதிகாரிகள் உத்தியோகத்தர்களின் நிதி பங்களிப்பில் வழங்கப்பட்டதுடன் இச் சிரேஷ்ட பிரஜைகளுக்கு தேவையான பொதுவான பொருட்கள் பொதிகளும் அருட்சகோதரிகளிடம் வழங்கப்பட்டது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)