
posted 6th November 2022
யுத்தத்திற்கு பிற்பாடு மீளக் குடியேறியுள்ள மக்களுக்கான வீட்டுத் திட்டமானது பூரணத்துவம் அடையாத நிலையில் கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் கௌரவ காதர் மஸ்தான் அவர்களின் கோரிக்கைக்கு அமைய குவைட் நாட்டின் ஸகாத் ஹவுஸின் (ணுயமயவா ர்ழரளந) நிதியுதவியோடு ஐஎஸ்ஆர்சி (ஐளுசுஊ) நிறுவனத்தின் அனுசரணையில் எறுக்கலம்பிட்டி ஸகாத் பவுண்டேசனினின் (ணுயமயவா குழரனெயவழைn) பூரண ஒத்துழைப்புடன் மன்னார் மாவட்டத்தின் எறுக்கலம்பிட்டி கிராமத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள 200 வீடுகளை கொண்ட வீட்டுத்திட்ட செயற்றிட்டத்துக்கு அமைய முதற்கட்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ள 75 வீடுகளை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சர் கௌரவ பிரசன்ன ரனதுங்கஇ கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் கௌரவ காதர் மஸ்தான் உள்ளிட்ட அதிதிகள் இணைந்து உத்தியோகப்பூர்வமாக பயனாளிகளுக்கு இன்று (06.11.20220 ஞாயிற்றுக்கிழமை குறித்த வீடுகளை கையளித்து வைத்தனர்.
தலா 13 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த வீடுகளை பயனாளிகளுக்கு கையளித்து வைக்கும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரென்லி டீமெல்இ தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தலைவர் ஆh. சூரிய ஆராய்ச்சிஇ மன்னார் பிரதேச செயலகப் பிரதேசச் செயலாளர் எம். பிரதீப்இ ஐஎஸ்ஆர்சி (ஐளுசுஊ) நிறுவனத்தின் ஸ்தாபகரும் பணிப்பாளருமான ஏ. மிஹ்லார்இகுவைட் நாட்டின் இலங்கைக்கான தூதுவரின் இணைப்பாளர்இ மன்னார் பிரதேசச் சபைத் தலைவர்இ பிரதேசச் சபை உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகள் எனப் பலரும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)