
posted 14th November 2022
மன்னார் மாவட்டத்துக்கு ஜனாதிபதி உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மன்னாரில் இதற்கான ஆய்த்தங்கள் மன்னார் மாவட்ட செயலகத்தினால் முன்னெடுக்கப்படுகின்றது.
அத்துடன் இதற்கான முன்னோடியாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் பணிப்பாளர் தலைமையில் ஒரு குழுவினர் மன்னார் மாவட்டத்தில் ஜனாதிபதி விஜயம் மேற்கொள்ள இருக்கும் இடங்களை வெள்ளிக்கிழமை (11) பார்வையிட்டு சென்றுள்ளனர்.
இவ் குழுவினர் மன்னாருக்கு வருகை தந்திருந்தபொழுது மன்னார் ஊடகவியலாளர்களுடனான ஒரு சந்திப்பை மேற்கொள்வதற்கான திட்டமிடப்பட்டிருந்த பொழுதும் அன்றைய தினம் மன்னாரில் காலநிலை மாற்றத்தால் கடும் குளிரும் மழையும் இடம்பெற்றமையால் நேரடி சந்திப்பை தவிர்த்து 'சூம்' மூலம் இவர்களுக்கான கூட்டம் இடம்பெற்றது.
மன்னாரில் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் காணப்படுமாகில் அவற்றை ஊடகப் பிரிவினூடாக ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வரும்படியும்
அவ்வாறு மன்னார் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டும் பட்சத்தில் இதிலும் கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)