
posted 14th November 2022
மன்னார் மாவட்ட செயலகமும் மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவையும் இணைந்து வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள அனுசரனையில் 'மன்னெழில் -11' மலர் வெளியீடும் 2022ம் ஆண்டுக்கான கலைஞர் கௌரவிப்பும் நடாத்துகின்றது.
மன்னார் மாவட்ட செயலக வளாகத்தில் 16.11.2022 அன்று புதன்கிழமை காலை 10 மணிக்கு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும் மன்னார் மாவட்ட கலை , பண்பாட்டுப் பேரவையின் தலைவருமான திருவாட்டி அ.ஸ்ரான்லி டி மெல் தலைமையில் இடம்பெறுகின்றது.
இவ் விழாவுக்கு பிரதம அதிதியாக வடக்கு மாகாண கல்வி , பண்பாட்டலுவல்கள் , விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.இ.வரதீஸ்வரன் கலந்து கொள்கின்றார்.
அத்துடன் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருவாட்டி ராஐமல்லிகை சிவசுந்தரசர்மா மற்றும் கௌரவ விருந்தினராக வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் திருவாட்டி லிங்கேஸ்வரி துணைவன் ஆகியோரும் கலந்து கொள்ளுகின்றனர்.
இவ் நிகழ்வானது அமரர் பீ.ஏ.அந்தோனி மார்க் அரங்கில் மலர் வெளியீடு , நடனங்கள் , 'கம்பனில் பெண்மை' சிறப்புரை , 'மன்கலைச்சுரபி' , 'மன்கலைத்தென்றல்' மற்றும் 'மன்இளம் கலைச்சுரபி' ஆகிய விருதுகளும் வழங்கும் நிகழ்வுகளும் இவ் அரங்கில் இடம்பெறுகின்றது.
இவற்றிற்கான நிகழ்சிக்கான தொகுப்புக்களை மன்னார் சிரேஷ்ட கலாச்சார உத்தியோகத்தர் திரு. இ. நித்தியானந்தன் மற்றும் எஸ்.சதீஸ் ஆகியோர் மேற்கொள்ளுகின்றனர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)