போராட்டத்தை  அடக்க இறக்கப்பட்ட பொலிஸார்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்துக்கு (ஓ. எம். பி.) எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை வலிந்து பொலிஸார் அடக்க முற்பட்டனர். இதனால், அந்தப் பகுதியில் நேற்று (31) பதற்றம் நிலவியது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அலுவலகம் நேற்று செவ்வாய்க்கிழமை பதிவுகளை முன்னெடுத்தது. இந்நிலையில், நேற்று அந்த அலுவலகத்தின் முன்பாகக் கூடிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்துக்கு எதிராகப் பல கோஷங்களை எழுப்பினர். அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தையும் நிராகரித்தனர்.

இந்த வேளை, பதிவுக்காக அலுவலகத்துக்கு வந்திருந்த சிலரையும் பதிவு செய்ய வேண்டாம் என்று கோரினர். இந்நிலையில், போராட்டம் நடத்திய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை பொலிஸார் வலிந்து அங்கிருந்து அகற்ற முனைந்தனர். இதையடுத்து அந்தப் பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.

எனினும், பின்னர் பதிவுகளை செய்வதற்காக வந்தவர்கள் அதனை செய்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.

போராட்டத்தை  அடக்க இறக்கப்பட்ட பொலிஸார்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)