
posted 8th November 2022

கடந்த காலங்களில் இனப்பிரச்சனைக்கான தீர்வாக ஆட்சியாளர்களால் முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்டங்களை கருத்திற் கொண்டும் 13வது திருத்தத்தின் சாராம்சத்தைப் பரீசீலித்தும்
ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வேண்டி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட 100 நாட்கள் மக்களின் குரலாக வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்களை மையமாக வைத்து செவ்வாய் கிழமை (08.11.2022) பிரகடனம் வெளிப்படுத்தப்பட்டது.
இந்த இறுதிநாள் வடக்கு கிழக்கில் எட்டு மாவட்டங்களிலும் ஒரேநேரத்தில் இடம்பெற்றபோதும் மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை விளையாட்டு மைதான முற்றவெளியில் நடைபெற்றபோது மன்னார் மாவட்டத்திலிருந்து நாலா பக்கங்களிலிருந்தும் அதிகமானோர் கலந்து கொண்டதுடன்
மதகுரு . மன்னார் நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் , விவசாய , மீனவ அமைப்பின் பிரதிநிதிகள் மாதர் சங்க ஒன்றிய பிரதிநிதி பல்கலைக் கழக மாணவர் அமைப்பின் பிரதிநிதி உட்பட மெசிடோ . பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் பிரதிநிதிகள் என பலரும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டதுடன்
கௌரவமான உரிமைகளுடன் கூடிய வாழ்வை வாழ்வதற்கு அடிப்படையான நிலைபேறான அரசியல் தீர்வை வேண்டி 16 தீர்வை முன்வைத்து வலியுறுத்தப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)