
posted 27th November 2022
மட்டக்களப்பு மாவட்டத்தின் முக்கிய ஊடகவியலாளர் அமைப்புகளில் ஒன்றான காத்தான்குடி மீடியா போரத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம். நூர்தீன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
காத்தான்குடி மீடியா போரத்தின் விசேட பொதுச்சபைக்கூட்டம் முன்னாள் தலைவர் முகம்மட் சஜி தலைமையில், மஞ்சந்தொடுவாய் அல்- பஜ்ர் அலுவலக மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் போதே புதிய தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் நூர்தீன் தெரிவு செய்யப்பட்டதுடன், மீடியா போரத்தின் ஆயுட்கால தலைவராக அதன் ஸ்தாபகத்தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான மௌலவி. எஸ்.எம்.எம். முஸ்தபாவும் (பலாஹி) தெரிவு செய்யப்பட்டார்.
புதிய தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் நூர்தீன் தம்மை புதிய தலைவராகத் தெரிவு செய்தமைக்கு நன்றி பகர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.
ஊடகவியலாளர்கள் மத்தியில் இனமத பேதங்களின்றி ஐக்கியத்தையும், நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்கு எமது செயற்பாடுகள் அமையவேண்டும்.
அதேவேளை சமூகத்தில் பொறுப்புமிக்க உயரிய பணியை முன்னெடுக்கும் ஊடகவயிலாளர்களாகிய நாம் நாட்டின் இறைமையைப் பாதுகாக்கவும், சமூகங்களிடையே ஒற்றுமை, நல்லிணக்கம் மேலோங்கவும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் என்றார்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY